நாட்டின் 76-வது சுதந்திர தினத்தை ஒட்டி, முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் புனித ஜார்ஜ் கோட்டை கொத்தளத்தில் தேசியக் கொடி ஏற்றிவைத்து, மரியாதை செலுத்தினார். இதனைத் தொடர்ந்து சுதந்திர தின உரையாற்றிய அவர், தகைசால் தமிழர் விருது, டாக்டர் ஏ.பி.ஜே.அப்துல் கலாம் பெயரிலான விருது, துணிவு மற்றும் சாகச செயலுக்கான கல்பனா சாவ்லா விருது, முதலமைச்சரின் நல் ஆளுமை விருது உள்ளிட்ட விருதுகளை வழங்கினார்.
இதில், ’தகைசால் தமிழர் விருது’ தமிழ்நாட்டிற்கும், தமிழினத்தின் வளர்ச்சிக்கும் மாபெரும் பங்காற்றியவர்களைப் பெருமைப்படுத்தும் வகையில் கடந்த 2021-ம் ஆண்டு முதல் தமிழக அரசால் வழங்கப்பட்டு வருகிறது. இந்த ஆண்டுக்கான தகைசால் தமிழர் விருது இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர் இரா.நல்லக்கண்ணுவிற்கு வழங்கப்பட்டது.
முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவருக்கு விருதுக்கான சான்றிதழையும், ரூ.10 லட்சத்துக்கான காசோலையையும் வழங்கினார். ஆனால், தான் பெற்ற ரூ.10 லட்சம் பரிசுத்தொகையுடன் தனது சொந்த நிதியான ரூ.5 ஆயிரத்தையும் சேர்த்து 10 லட்சத்து 5 ஆயிரம் ரூபாயாக நல்லக்கண்ணு முதலமைச்சரின் நிவராண நிதிக்கு திருப்பி அளித்தார்.
சென்னை, தலைமைச் செயலகக் கோட்டை முகப்பில் நடைபெற்ற சுதந்திரத் திருநாள் விழாவில், இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர் திரு.ஆர்.நல்லகண்ணு அவர்களுக்கு தகைசால் தமிழர் விருதுடன் ரூ.10 லட்சத்திற்கான காசோலை, பாராட்டுச் சான்றிதழை மாண்புமிகு முதலமைச்சர் @mkstalin அவர்கள் வழங்கினார் pic.twitter.com/eyinfoFyHL
— CMOTamilNadu (@CMOTamilnadu) August 15, 2022
நமக்கு வேண்டுமானால் இது மிகுந்த ஆச்சர்யத்தை அளிக்கக்கூடும். ஆனால் நல்லக்கண்ணுவிற்கு இது புதிதல்ல. அவரது 80-வது பிறந்தநாளை ஒட்டி, கட்சி சார்பில் திரட்டிக் கொடுக்கப்பட்ட ரூ.1 கோடியையும் அவர் கட்சிக்கே திருப்பி அளித்தார்.
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ