தென்காசி மாவட்டத்தில் விற்பனைக்காக குட்கா கடத்தி வந்த மூன்று பேரை போலீசார் கைது செய்துள்ளனர்.
தென்காசி மாவட்டம் கடையநல்லூர் பகுதிகளில் கார், இருசக்கர வாகனங்களில் குட்கா கடத்தி வரப்படுவதாக தென்காசி மாவட்ட போலீஸ் சூப்பிரண்டுக்கு ரகசிய தகவல் கிடைத்துள்ளது.
இந்த தகவலையடுத்து கடையநல்லூர் குற்றப்பிரிவு இன்ஸ்பெக்டர் தலைமையில் போலீசார் கடையநல்லூர் பண்மொழி சாலையில் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர்.
அப்பொழுது அந்த வழியாக வந்த கார், இருசக்கர வாகனங்களில் சோதனை செய்ததில், தடை செய்யப்பட்ட குட்கா இருந்தது தெரியவந்துள்ளது.
இதையடுத்து காரில் இருந்த மூன்று பேரிடம் விசாரணை மேற்கொண்டதில், ஐந்து வர்ணம் பெரிய தெருவை சேர்ந்த நாகூர் மீரான், மேல கடையநல்லூர் பகுதியை சேர்ந்த வைரமுத்து மற்றும் புதுமனை இரண்டாவது தெருவை சேர்ந்த நூரி ஹமின் என்பதும், அவர்கள் சில்லறை கடைகளுக்கு விற்பனைக்காக குட்கா கொண்டு வந்ததும் தெரிய வந்துள்ளது.
இதைத்தொடர்ந்து மூன்று பேரையும் கைது செய்த போலீசார் அவர்களிடம் இருந்த ரூபாய் ஒரு லட்சம் மதிப்புள்ள 90 கிலோ குட்கா மற்றும் விற்பனைக்கு பயன்படுத்திய கார், இருசக்கர வாகனங்களை பறிமுதல் செய்துள்ளனர்.