இந்திய நாடு முழுவதும் 75-வது ஆண்டு சுதந்திர தினத்தை நாட்டுமக்கள் தத்தம் வீடுகளில் கொடி ஏற்றி வைத்து வெகு விமரிசையாகக் கொண்டாடப்பட்டு வரும் நிலையில், தமிழக தென் மாவட்டங்களின் வளர்ச்சிக்கு ஆதரமாக திகழும் வைகை எக்ஸ்பிரஸ்ன் 45-வது பிறந்தநாளைக் ரயில் பயணிகள் கேக் வெட்டியும், சிறப்பு பூஜைகள் செய்தும், ரயில் ஓட்டுனருக்கு மரியாதை செய்தும் உற்சாகமாக கொண்டாடினர். கடந்த 1977-ஆம் ஆண்டு ஆகஸ்ட் 15-ஆம் நாள் அறிமுகப்படுத்தப்பட்ட சென்னை மற்றும் மதுரைக்குச் செல்லும் பகல் நேர விரைவு ரயிலாக உள்ள இந்த ரயில் தென் மாவட்ட வணிகர்கள் பெரிதும் பயனுள்ளதாக உள்ளது.
குறிப்பாக இந்த ரயில் அறிமுகப்படுத்தப்பட்ட ஆண்டிலேயே மீட்டர் கேஜ் ரயில் பாதையில் மணிக்கு 105 கி.மீ. வேகத்தில் சென்ற இந்தியாவின் அதி விரைவு ரயில் என்ற பெருமையைப் பெற்றது. ஆசியாவிலேயே மீட்டர் கேஜில் அதிவேகமாக இயக்கப்பட்ட ரயில் என்ற பெருமையும் வைகை எக்ஸ்பிரஸ்க்கு உண்டு.
நாள்தோறும் மதுரையிலிருந்து காலை 7.10 மணிக்குப் புறப்பட்டு பிற்பகல் 2.35 மணிக்கு சென்னையை சென்றடையும். மொத்த பயண நேரம் 7 மணி 25 நிமிடங்கள். அதேபோன்று மறு மார்க்கமாக சென்னையிலிருந்து பிற்பகல் 1.40 மணிக்குப் புறப்பட்டு இரவு 9.15 மணியளவில் மதுரை வந்தடையும். இதில் மொத்த பயண நேரம் 7 மணி 35 நிமிடங்கள் ஆகும்.
மதுரையில் இருந்து புறப்படும் போது 12636 என்ற எண்ணிலும் மற்றும் சென்னையில் இருந்து கிளம்பும் போது 12635 என்ற எண்ணிலும் செல்கிறது வைகை எக்ஸ்பிரஸ். மதுரைக்கும் சென்னைக்கும் இடையே செல்லும் இந்த இரயில் சூப்பர்ஃபாஸ்ட் வைகை எக்ஸ்பிரஸ் என்று அழைக்கப்படுகிறது. மதுரையில் இருந்து சென்னைக்கு பயணிக்க மக்கள் மத்தியில் மிகவும் பிரசிதிபெற்ற மற்றும் எப்பொழுதும் பிசியாக இயங்க கூடியது இந்த வைகை.
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ