முன்பெல்லாம் திரையரங்குகள், தொலைக்காட்சியில் மட்டுமே திரைப்படங்கள் பார்க்க முடியும் என்ற நிலையில் தற்போது ஸ்ட்ரீமிங் சேவைகள் என்று கூறப்படும் ஓடிடி தளங்கள் ஏராளமாக வந்துவிட்டன.
அமேசான், நெட்பிளிக்ஸ் உள்ளிட்ட பல ஓடிடி தளங்கள் மூலம் பொதுமக்கள் வீட்டில் இருந்துகொண்டே திரைப்படங்களை பார்த்து வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த நிலையில் சமூக வலைதளங்களில் முன்னணியில் இருக்கும் யூடியூப் இணையதளம் ஸ்ட்ரீமிங் சேவையை தொடங்க இருப்பதாக வெளிவந்திருக்கும் செய்தி ஓடிடி தள நிறுவனங்கள் மத்தியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
குக்கர் விற்பனை செய்தது தப்பா? அமேசான் நிறுவனத்திற்கு ரூ.1 லட்சம் அபராதம்!

யூடியூப்
உலகின் முன்னணி சமூக வலைதளங்களில் ஒன்றான யூடியூபில் கோடிக்கணக்கான வீடியோக்கள் கொட்டி கிடக்கின்றன என்பதும் அந்த வீடியோக்கள் சிறுவர் முதல் பெரியவர்கள் வரை கவரும் வகையில் உள்ளன என்பதும் அனைவரும் அறிந்ததே.

உலக அளவில் பிரபலம்
எந்த ஒரு துறையில் சந்தேகம் ஏற்பட்டாலும் உடனே யூடியூப் வீடியோவை பார்த்து தெரிந்து கொள்ளும் பழக்கம் இன்றைய மாணவர்கள் மத்தியில் ஏற்பட்டுள்ளது என்பதும் இந்த தளம் இன்று உலக அளவில் பிரபலமாகியுள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது.

ஸ்ட்ரீமிங் சேவை
அந்த வகையில் உலகம் முழுவதும் கோடிக்கணக்கான வீடியோக்களை வைத்து கொண்டு பில்லியன் கணக்கான மக்களை கவர்ந்துள்ள யூடியூப் நிறுவனம் தற்போது அடுத்த கட்டமாக ஸ்ட்ரீமிங் சேவையில் ஈடுபட உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

சேனல் ஸ்டோர்
ஸ்ட்ரீமிங் வீடியோ சேவைகளுக்காக ‘சேனல் ஸ்டோர்’ என்ற ஒரு பிரத்யேக நிறுவனத்தை தொடங்க யூடியூப் திட்டமிட்டுள்ளது என்று தகவல்கள் வெளியாகியுள்ளன. இந்த ஸ்டிரீமிங் சேவை நிறுவனத்திற்காக பொழுதுபோக்கு நிறுவனங்களுடன் யூடியூப் நிர்வாகம் பேச்சுவார்த்தை நடத்தி வருவதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.

18 மாதங்களாக பணிகள்
கடந்த 18 மாதங்களாக யூடியூப் ஸ்ட்ரீமிங் சேவைகளுக்கான பணிகள் நடைபெற்று வருகிறது என்றும் விரைவில் யூடியூப் ஸ்டீமிங் சேவை மக்களுக்கு கிடைக்கும் என்றும் கூறப்படுகிறது. ஆனால் அதே நேரத்தில் இது குறித்த கேள்விக்கு யூடியூப் நிறுவனம் எந்த விதமான பதிலும் அளிக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

சாட்டிலைட் டிவி?
கேபிள் டிவி மூலம் மூலம் அல்லது சாட்டிலைட் டிவி அடிப்படையிலான ஸ்ட்ரீமிங் சேவை செய்ய திட்டமிட்டுள்ளதாக யூடியூப் வட்டாரங்களில் உறுதி செய்துள்ளன. ஏற்கனவே நெட்பிளிக்ஸ், அமேசான், ஹாட்ஸ்டார் உள்பட பல ஓடிடி நிறுவனங்கள் போட்டி போட்டுக்கொண்டு தங்களது சந்தாதாரர்களுக்கு திரைப்படங்களையும், வெப்தொடர்களையும் வழங்கி வரும் நிலையில் யூடியூப் நிறுவனமும் ஸ்ட்ரீமிங் சேவை களத்தில் இறங்கினால் ஸ்ட்ரீமிங் சேவைகள் தரும் நிறுவனங்கள் மத்தியில் மிகப்பெரிய அளவில் போட்டி இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
YouTube plans to launch streaming video service: Report
YouTube plans to launch streaming video service! ஸ்ட்ரீமிங் சேவையில் யூடியூப்? நெட்பிளிக்ஸ், அமேசானுக்கு வேற லெவல் போட்டி?