சென்னையில் 75 வது சுதந்திர தின விழாவில் கலந்துகொண்ட பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழியிடம் நடப்பாண்டில் 11 ஆம் வகுப்பு பொதுத்தேர்வு நடக்குமா? தேர்வு ரத்து சென்ற தகவல் உலா வருகிறதை குறித்து கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு விளக்கம் அளித்த அமைச்சர் தொடர்ந்து பேசியதாவது, அது தவறான தகவல். 11 ஆம் வகுப்பு பொதுத்தேர்வு வழக்கம்போல நடைபெறும் என்று கூறினார்.
மேலும், பொதுத்தேர்வு வைப்பதற்கு காரணம் என்னவென்றால், பொதுவாக தனியார் பள்ளிகளில் 11 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு 11 ஆம் வகுப்பு பாட திட்டத்தை நடத்தாமல் நேரடியாக 12 ஆம் வகுப்புக்கான பாடங்களை நடத்தி தங்கள் பள்ளி மாணவர்கள் 12 ஆம் வகுப்பு பொதுத்தேர்வில் அதிக மதிப்பெண் எடுக்க வேண்டும் என்ற சிந்தனையில் செயல்படுகின்றனர்.
ஆனால், 11 ஆம் வகுப்பிலேயே பொதுத்தேர்வு வைத்தால் மாணவர்கள் அதை எதிர்கொண்டு 12 ஆம் வகுப்பு பொதுத்தேர்வை பயமில்லாமல் சந்திப்பார்கள். அப்படி இல்லையென்றால் 12 ஆம் வகுப்பு பொதுத்தேர்வில் அவர்கள் சிக்கிவிடுவார்கள். ஆகையால் இதுவரை 11 ஆம் வகுப்பு பொதுத்தேர்வை மாற்றுகின்ற எந்த முடிவையும் அரசு எடுக்கவில்லை. அது நடைமுறையில் தான் உள்ளது.
அரசு வேலைவாய்ப்பு சார்ந்த போட்டி தேர்வுகளுக்கு 11ம் வகுப்பு பாடங்களும் முக்கியம். எனவே, மாணவர்கள் எந்த குழப்பமும் அடையாமல் தன்னம்பிக்கையுடன் படித்து பொதுத்தேர்வை சந்திக்க வேண்டிக் கேட்டுக்கொள்கிறோம் என அமைச்சர் இவ்வாறு கூறினார்.