இந்திய குடிமக்கள் அனைவருக்கும் சுதந்திர தின நல்வாழ்த்துகள். இந்திய சுதந்திரம் பெற்ற இந்த நன்நாளில் முதலீட்டாளர்கள் தெரிந்து கொள்ள வேண்டிய சில விஷயங்களை பற்றித் தான் இந்த பதிவில் பார்க்க இருக்கிறோம்.
இந்தியா இன்று 76வது சுதந்திர தினத்தினை கொண்டாடுகின்றது. இந்த காலகட்டத்தில் தங்கம் 50,000% அதிகமாக லாபத்தினை வாரிக் கொடுத்துள்ளது.
தங்கம் விலை 3வது நாளாக சரிவு.. இன்று எவ்வளவு குறைந்திருக்கு..இது வாங்க சரியான நேரமா?
பாதுகாப்பு புகலிடம்
பொதுவாக முதலீடுகளில் தங்கத்தினை பாதுகாப்பு புகலிடம் என்று கூறுவார்கள். எத்தகைய பிரச்சனைகள் சவால்கள் என பலவும் நிலவி வந்தாலும், அதிலும் முதலீட்டாளர்கள் தங்களை பாதுகாத்து கொள்ள தங்கத்தில் முதலீடு செய்வார்கள். இதனால் தான் இது பாதுகாப்பு புகலிடமாகவும் உள்ளது.
கவர்ச்சிகரமான முதலீடு
இந்தியாவில் தங்கம் என்பது கவர்ச்சிகரமான முதலீடுகளில் ஒன்றாக உள்ளது. இது ஆபரணமாகவும், முதலீடுகளிலும் முக்கிய பங்கு வகிக்கும் ஒரு உலோகமாக உள்ளது. கடந்த 1947ம் ஆண்டில் தங்கம் விலையானது 10 கிராமுக்கு சுமார் 88.62 ரூபாயாக ஏற்றம் கண்டுள்ளது. ஆனால் இன்று 49,140 ரூபாய் என்ற லெவலில் காணப்படுகின்றது. இது 50,000% மேலாக ஏற்றத்தில் காணப்படுகின்றது.
அதிக ஏற்ற இறக்கம்
இன்றும் இந்தியா மிகப்பெரிய தங்கம் இறக்குமதியாளராக உள்ளது. எனினும் இந்திய சந்தையில் விலையானது சர்வதேச சந்தையினை பொறுத்தே இருக்கும். குறிப்பாக பணவீக்கத்தின் மத்தியில் கடந்த சில் மாதங்களாகவே தங்கம் விலையானது அதிக ஏற்ற இறக்கத்தில் காணப்படுகிறது. மொத்தமாக பார்க்கும்போது கடந்த சில வாரங்களில் தங்கம் விலையானது உச்சத்திலேயே காணப்படுகிறது.
1942 டூ 2022க்கான வெற்றி பயணம்
1942ல் வெள்ளையனே வெளியேறு திட்டம் உச்சத்தில் இருந்தபோது தங்கம் விலை 10 கிராமுக்கு 44 ரூபாய். இது 1947ல் 88 ரூபாயாக இருமடங்கு அதிகரித்தது. அதன் பிறகு தங்கம் விலையானது தொடர்ச்சியாக ஏற்றம் காண ஆரம்பித்தது. இது மதிப்புமிக்க ஆவணங்களில் ஒன்றாகவும், பணவீக்கத்திற்கு எதிரான சிறந்த ஹெட்ஜிங் ஆகவும் உள்ளது. இது இன்று பணவீக்கத்தினையும் விஞ்சி லாபம் கொடுத்துள்ளது குறிப்பிடத்தக்கது.
300 மடங்கு ஏற்றம்
1947ம் ஆண்டில் 10 கிலோ தங்கத்தின் விலை டெல்லியில் இருந்து மும்பைக்கு விமான டிக்கெட்டுக்கான விலையை விட குறைவாக இருந்தது. இந்திய அஞ்சல் தங்க சேவையின் படி அப்போது தங்கம் விலையானது 88.62 ரூபாயாக இருந்தது. 7 தசாப்தங்களுக்கு பிறகு தங்கம் விலையானது 300 மடங்கு ஏற்றம் கண்டுள்ளது.
தங்கம் விலை வரலாறு
இது 1970 காலகட்டத்தில் 184 ரூபாயாக இருந்த தங்கம் விலையானது, 1980ல் 1330 ரூபாயாக ஏற்றம் கண்டது. 1990ல் 3000 ரூபாயாக இருந்த தங்கம் விலை, 2010ல் 18,500 ரூபாயாகவும், 20415ல் 26,343.50 ரூபாயாகவும், 2020ல் 48,651 ரூபாய் என்ற லெவலிலும் காணப்பட்டது. இந்த நிலையில் நடப்பு ஆண்டில் 49,000 ருபாய்க்கு மேலாக ஏற்றத்தில் காணப்படுகின்றது.
Do you know how much gold cost in 1947?
Do you know how much gold cost in 1947?/1947ல் தங்கம் விலை எவ்வளவு தெரியுமா.. 76வது சுதந்திர நாளில் இன்று எவ்வளவு?