500, 200, 100..ரூபாய் நோட்டுகளின் வரிசை எண்களை கொண்டு சுதந்திர தினம் கொண்டாடும் ஆசிரியை.!

500, 200, 100, 50, 20, 10 ரூபாய் நோட்டுகளில் உள்ள வரிசை எண்களை கொண்டு சுதந்திர தினத்தை கொண்டாடும் அரசு பள்ளி ஆசிரியை ஹேமலதா.
விழுப்புரம் மாவட்டம் செஞ்சி அருகே உள்ள சே குன்னத்தூர் அரசு மேல்நிலைப் பள்ளியில் தமிழ் ஆசிரியராக பணியாற்றி வருபவர் ஹேமலதா. கொரோனா பெருந்தொற்று காலத்தில் பல்வேறு விழிப்புணர்வு நிகழ்வுகளை நிகழ்த்தியவர். அதுமட்டுமல்லாமல் அப்போது மாணவர்கள் பள்ளிக்கூடத்திற்கு வர முடியாத நிலை இருந்தபோதும், அவர்களுக்கான பாடத்தை பென்டிரைவ் மூலமாக தயார்செய்து நேரடியாக அவர்கள் வீடுகளுக்கே சென்று வழங்கி மாணவர்களின் வீட்டில் இருந்தபடியே படிப்பதற்கும் உதவி செய்தவர். தொடர்ந்து 100 நாடுகளின் நாணயங்களை சேகரித்து வைத்துள்ளார் மற்றும் தற்போது இந்தியாவில் பயன்பாட்டில் இல்லாத ரூபாய் நோட்டுகளையும் சேகரித்து வைத்துள்ளார்.
image
மேலும் தற்போது ரூபாய் நோட்டுகளை சேகரிக்கும் ஆர்வம் அதிகளவு உருவானதை அடுத்து ரூபாய் நோட்டுகளில் உள்ள வரிசை எண்களை கொண்டு தமிழகத்தின் தமிழறிஞர்கள் பிறந்த தினம் மற்றும் இறந்த தினத்தை ரூபாய் நோட்டுகளின் வரிசை எண்களின் மூலமாக சேகரித்து வருகிறார். அதை தான் மட்டுமில்லாமல் மாணவர்களிடமும் கற்பித்தும் வருகிறார்.
image
இந்நிலையில் 75 ஆவது சுதந்திர தினமான இன்று, 500 ரூபாய்,200 ரூபாய்,100 ரூபாய்,50 ரூபாய் மற்றும் 20 ரூபாய் நோட்டுகளில் உள்ள வரிசை எண்களை கொண்டு சுதந்திரம் பெறப்பட்ட 1947 ஆம் ஆண்டுக்கு நிகராக உள்ள எண் வரிசையில் இருந்து தற்போது வரை சேகரித்து வைத்துள்ளார்.
image
மேலும் இந்த ஆசிரியை பனை மற்றும் தென்னை கழிவுகளை கொண்டு கலைப் பொருட்களை தயார் செய்து மாணவர்களிடையே விழிப்புணர்வை ஏற்படுத்தி வருகிறார். அது மட்டும் இல்லாமல் 100 நாடுகளின் நாணயங்களையும் மற்றும் 100 நாடுகளின் தேசிய கொடிகளையும் சேகரித்து வைத்துள்ளார்.
image
இதுகுறித்து பேசிய அவர், இதுபோன்ற செயல்கள் மாணவர்களிடையே தொடர்ந்து பள்ளி வருவதற்கான வாய்ப்புகளை பெற்றுத் தரும் என்கிறார் அந்த தமிழாசிரியர். மேலும் மாணவர்களையும் ஊக்கப்படுத்தி கலைப்பொருட்கள் தயாரிப்பது மற்றும் ரூபாய் நோட்டுகள்,நாணயங்கள் சேகரிப்பது என பல்வேறானா ஆர்வத்தை மாணவர்களிடையே ஏற்படுத்தி வருகிறார் தமிழ் ஆசிரியை ஹேமலதா.
image
– ஜோதி நரசிம்மன்Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.