76th independence day: 'ஹலோவுக்கு பதில் வந்தே மாதரம்' – அமைச்சரின் அதிரடி உத்தரவு!

மகாராஷ்டிராவில் சிவசேனா – தேசியவாத காங்கிரஸ் கூட்டணி ஆட்சி கவிழ்கப்பட்டு சிவசேனா அதிருப்தி எம்.எல்.ஏக்களுடன் இணைந்து பாஜக ஆட்சியை பிடித்துள்ளது. புதிய முதல்வராக ஏக்நாத் ஷிண்டேவும், துணை முதலமைச்சராக தேவேந்திர பட்நவிஸும் பதவியேற்றனர். முதலமைச்சராக ஏக்நாத் ஷிண்டே பதவியேற்று ஒரு மாத காலம் நிறைவடைந்த நிலையிலும் அமைச்சர் குறித்த விபரங்கள் வெளியிடப்படாமல் இருந்தது. காரணம் அதிருப்தி சட்டமன்ற உறுப்பினர்களின் பதவியை பறிக்க உச்சநீதிமன்றத்தில் சிவசேனா தொடர்ந்த வழக்கு விசாரணையில் உள்ளது.

அமைச்சர்கள் இல்லாததால் அரசு நிர்வாகம் முடங்கி கிடப்பாதாக சிவசேனா உள்ளிட்ட எதிர் கட்சிகள் கடுமையாக குற்றம்சாட்டி வந்தது. இதற்கிடையே முதலமைச்சர் ஏக்நாத் ஷிண்டேவுக்கு உடல்நலம் பாதிக்கப்பட்டதால் மருத்துவ குழுவினர் அவரை ஓய்வெடுக்கும்படி அறிவுறுத்தியுள்ளனர்.

இந்நிலையில், அமைச்சர்கள் பட்டலுடன் டெல்லியில் முகாமிட்ட பட்நவீஸ் அமைச்சர்கள் பட்டியலை இறுதி செய்துள்ளார். அதன்படி 9-ம் தேதி அமைச்சரவை விரிவாக்கம் செய்யப்பட்டது. ஏக்நாத் தரப்பில் 9 பேர், பட்நவீஸ் தரப்பில் 9 பேர் என மொத்தம் 18 பேர் அமைச்சர்களாக பதவியேற்றனர். முதலமைச்சர் ஏக்நாத் ஷிண்டேவுக்கு நகர மேம்பாட்டு துறையும், துணை முதலமைச்சராக உள்ள பட்நவீஸுக்கு மிக முக்கியமான உள்துறையும் ஒதுக்கப்பட்டது.

தேசிய கொடியை புறக்கணிக்கனுமாம்; மடாதிபதி பகீர் விளக்கம்; பா.ஜ.க ஷாக்!

நீதி, பொது நிர்வாகம், வருவாய், ஊரக வளர்ச்சி, கூட்டுறவுத் துறை உட்பட சில முக்கிய துறைகளில் அவசர காலங்களில் சம்பந்தப்பட்ட துறையின் செயலாளர்கள் முக்கிய முடிவுகளை எடுக்கவும் அதிகாரம் வழங்கப்பட்டுள்ளது.

இதனிடையே, புதிதாக பொறுப்பேற்றுள்ள கலாச்சாரத்துறை அமைச்சர் சுதிர் முங்கண்டிவார், அரசு ஊழியர்களுக்கு வாய்மொழி உத்தரவு ஒன்றை பிறப்பித்துள்ளார். அரசு ஊழியர்கள், அதிகாரிகள் அனைவரும் அலுவல் சமயத்தில் செல்போன் மற்றும் தொலைபேசி அலைப்புகளுக்கு ஹலோ என்பதற்கு பதிலாக வந்தே மாதரம் என்று கூற வேண்டும் என்று உத்தரவிட்டுள்ளார்.

இதுகுறித்து விளக்கமளித்துள்ள அமைச்சர் சுதிர் முங்கண்டிவார்(Sudhir Mungantiwar) 76-வது சுதந்திர நாட்டில் அடியெடுத்து வைக்கும் நாம் வந்தே மாதரம் என்று உச்சரிப்பது நமது கடமை மட்டுமல்ல உணர்வு என்று கூறியுள்ளார்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.