சென்னை அரும்பாக்கத்தில் உள்ள பெடரல் வங்கி கிளையில் நடந்த கொள்ளை வழக்கில் முக்கிய குற்றவாளியான முருகன் கைது செய்யப்பட்டுள்ளார்.
பட்டப்பகலில் அரும்பாக்கம் பெடரல் வங்கி கிளையின் காவலாளிக்கு குளிர்பானம் கொடுத்தும், ஊழியர்களை கட்டிப்போட்டும் 32 கிலோ நகைகள் கொள்ளையடிக்கப்பட்டது.
இதுகுறித்து அரும்பாக்கம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தினர். வங்கியின் இன்னொரு கிளையில் மண்டல மேலாளராக பணியாற்றிய முருகன் முக்கிய குற்றவாளி என்பது தெரியவந்தது.
மேலும், முருகன் தனது கூட்டாளிகளுடன் சேர்ந்து கொள்ளை சம்பவத்தில் ஈடுபட்டதும் தெரியவந்தது. இதையடுத்து முருகனின் செல்போன் எண்ணை வைத்து சந்தோஷ், பாலாஜி, சக்திவேல் ஆகிய 3 பேர் கைது செய்யப்பட்டனர். அவர்களிடமிருந்து 20 கிலோ நகைகள் மீட்கப்பட்டன.
முருகனை பிடிக்க 4 தனிப்படைகள் தேடுதல் வேட்டையை தீவிரப்படுத்தியா நிலையில், சற்றுமுன் முருகன் கைது செய்யப்பட்டுள்ளார். மேலும், இந்த கொள்ளை சம்பவம் குறித்து போலீசார் செய்தியாளர்களை சந்தித்து விளக்கமளிக்க உள்ளனர்.