India Tour of Zimbabwe 2022 Schedule, Squads, Venues, Dates, Time, Live Telecast, and Live Streaming Details Tamil News: ஜிம்பாப்வே நாட்டில் சுற்றுப்பயணம் மேற்கொள்ளும் இந்திய கிரிக்கெட் அணி, அந்த அணிக்கு எதிராக 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் விளையாடுகிறது. இதில் இவ்விரு அணிகளுக்கு இடையேயான முதலாவது ஒருநாள் போட்டி வரும் 18 ஆம் தேதி (பிற்பகல் 12.45 மணி) ஹராரேயில் நடக்கிறது. நேற்று முன்தினம் ஹராரே சென்றடைந்த இந்திய வீரர்கள், நேற்று முதல் தீவிர பயிற்சியில் ஈடுபட்டு வருகின்றனர்.
முன்னதாக, இத்தொடருக்கான இந்திய அணியை பிசிசிஐ கடந்த ஜூலை 30-ம் தேதி அறிவித்தது. அதில், கேப்டன் ரோகித் சர்மா, விராட் கோலி, ரிஷப் பண்ட், ஹர்திக் பாண்ட்யா, ஜடேஜா, பும்ரா ஆகியோருக்கு ஓய்வு அளிக்கப்படுகிறது என்றும், ஷிகர் தவான் அணியின் கேப்டனாக செயல்படுவார் என்றும் தெரிவிக்கப்பட்டது.
இந்நிலையில், பிசிசிஐ கடந்த 12ம் தேதி வெளியிட்ட அறிவிப்பில், ஜிம்பாப்வே அணிக்கு எதிரான ஒருநாள் தொடரில் இந்திய அணியை கே.எல்.ராகுல் வழிநடத்துவார் என்றும், ஷிகர் தவான் அணியின் துணை கேப்டனாக செயல்படுவார் என்றும் தெரிவித்தது. வயிற்று பகுதியில் ஏற்பட்ட காயத்துக்கு ஆபரேஷன் செய்து குணமடைந்த ராகுல், கொரோனா தொற்றில் சிக்கியதால் மேலும் இரு வாரங்கள் ஒதுங்கி இருந்தார். கடைசி நேரத்தில் உடல்தகுதியை எட்டியதால் அவர் ஜிம்பாப்வே தொடருக்கான இந்திய அணியின் கேப்டனாக நியமிக்கப்பட்டு இருக்கிறார்.
இந்திய அணி எப்படி?
ஜிம்பாப்வேக்கு எதிரான இந்திய ஒருநாள் அணியில் கேப்டன் ராகுல், துணை கேப்டன் ஷிகர் தவான் தவிர அனைவருமே இளம் வீரர்கள் மற்றும் ஜிம்பாப்வே மண்ணில் விளையாடிய அனுபவம் இல்லாத வீரர்கள். எனவே அணியின் தொடக்க வீரர்களாக கேப்டன் ராகுல் – மூத்த வீரர் தவான் இருப்பார்கள். சமீபத்தில் நடந்த வெஸ்ட் இண்டீசுக்கு எதிரான ஒரு நாள் தொடரில் இந்திய அணியின் தொடக்க ஆட்டக்காரராக ஷிகர் தவானுடன் இணைந்த, இளம் வீரர் சுப்மான் கில், 3 ஆட்டத்தில் ஆடி 2 அரைசதம் உள்பட மொத்தம் 205 ரன்கள் எடுத்து தொடர்நாயகனாக ஜொலித்தார். அவர் அணியில் 3-வது வரிசையில் களம் காணுவார்.
இதையும் படியுங்கள்: தவானை சுழற்றி விட்ட பிசிசிஐ… கேப்டனாக குட்டி கோலி… பின்னணி என்னவா இருக்கும்?
மிடில்-ஆடரில் தீபக் ஹூடா, ராகுல் திரிபாதி, சஞ்சு சாம்சன் போன்றோர் வலு சேர்க்கிறார்கள். ஆல்ரவுண்டர்களாக வாஷிங்டன் சுந்தர், அக்சர் படேல் உள்ளனர். சுழலில் மிரட்ட குல்தீப் யாதவும், வேகத்தாக்குதல் தொடுக்க ஷர்துல் தாக்கூர், அவேஷ் கான், பிரசித் கிருஷ்ணா, முகமது சிராஜ் , தீபக் சாஹர் உள்ளிட்டோரும் உள்ளனர். அணியின் விக்கெட் கீப்பர் வீரராக சஞ்சு சாம்சன் செயல்பாட இருக்கிறார்.
ஜிம்பாப்வே ஒருநாள் தொடருக்கான இந்திய அணி வீரர்கள் பட்டியல்:
கே.எல்.ராகுல் (கேப்டன்), ஷிகர் தவான் (துணை கேப்டன்), ருதுராஜ் கெய்க்வாட், சுப்மான் கில், தீபக் ஹூடா, ராகுல் திரிபாதி, இஷான் கிஷன், சஞ்சு சாம்சன், வாஷிங்டன் சுந்தர், ஷர்துல் தாக்கூர், குல்தீப் யாதவ், அக்சர் படேல், அவேஷ் கான், பிரசித் கிருஷ்ணா, முகமது சிராஜ் , தீபக் சாஹர்.
ஜிம்பாப்வே அணி:
ரியான் பர்ல், ரெஜிஸ் சகாப்வா (கேப்டன்), தனகா சிவாங்கா, பிராட்லி எவன்ஸ், லூக் ஜாங்வே, இன்னசென்ட் கையா, டகுட்ஸ்வானாஷே கைடானோ, கிளைவ் மடண்டே, வெஸ்லி மாதேவெரே, தடிவானாஷே என்சரா, டோனிசரா நகர்வானி, ஜான்னிசரா நகர்வானி, சிக்கந்தர் ராசா, மில்டன் ஷும்பா, டொனால்ட் டிரிபானோ.
இந்தியா vs ஜிம்பாப்வே நேரடி ஒளிபரப்பு:
இந்தியா vs ஜிம்பாப்வே சோனி ஸ்போர்ட்ஸ் நெட்வொர்க்கில் ஒளிபரப்பப்படும்.
இந்தியா vs ஜிம்பாப்வே லைவ் ஸ்ட்ரீமிங் Sony Liv ஆப் மற்றும் இணையதளத்தில் கிடைக்கும்.
ஜிம்பாப்வேயில், சூப்பர்ஸ்போர்ட் டிவி IND vs ZIM ODI தொடரின் நேரடி ஒளிபரப்பை ஒளிபரப்பும்.
இதையும் படியுங்கள்: தவானை சுழற்றி விட்ட பிசிசிஐ… கேப்டனாக குட்டி கோலி… பின்னணி என்னவா இருக்கும்?
இந்தியா vs ஜிம்பாப்வே அட்டவணை:
தேதி, போட்டி நடைபெறும் நேரம்:
முதலாவது ஒருநாள் – ஆகஸ்ட் 18 – ஹராரே 12:45 PM IST
2வது ஒருநாள் – ஆகஸ்ட் 20 – ஹராரே 12:45 PM IST
3வது ஒருநாள் – ஆகஸ்ட் 22 – ஹராரே 12:45 PM IST
NEWS – KL Rahul cleared to play; set to lead Team India in Zimbabwe.
More details here – https://t.co/GVOcksqKHS #TeamIndia pic.twitter.com/1SdIJYu6hv
— BCCI (@BCCI) August 11, 2022
இதையும் படியுங்கள்: தவானை சுழற்றி விட்ட பிசிசிஐ… கேப்டனாக குட்டி கோலி… பின்னணி என்னவா இருக்கும்?
தமிழ்இந்தியன்எக்ஸ்பிரஸின்அனைத்துசெய்திகளையும்உடனுக்குடன்டெலிகிராம்ஆப்பில்பெறhttps://t.me/ietamil