வட்டி விகித உயர்வு: இந்திய ரிசர்வ் வங்கி (ஆர்பிஐ) ரெப்போ விகிதத்தை உயர்த்திய பிறகு, வங்கிகள் கடன் வட்டி விகிதங்களை அதிகரித்து வாடிக்கையாளர்களுக்கு தொடர்ந்து அதிர்ச்சியை அளித்து வருகிறது. தற்போது நாட்டின் மிகப்பெரிய பொதுத்துறை வங்கியான பாரத ஸ்டேட் வங்கியின் பெயரும் இந்த வங்கிகளின் பட்டியலில் சேர்க்கப்பட்டுள்ளது. அதாவது நாட்டின் மிகப்பெரிய பொதுத்துறை வங்கியான ஸ்டேட் பாங்க் ஆப் இந்தியா (எஸ்பிஐ) வாடிக்கையாளர்களுக்கு பெரும் அதிர்ச்சியை அளித்துள்ளது. எஸ்பிஐ வங்கி எம்சிஎல்ஆர் எனப்படும் கடனுக்கான இறுதிநிலை செலவு வீதத்தை 20bps அதிகரித்துள்ளது. அதிகரிக்கப்பட்ட இந்த விகிதம் ஆகஸ்ட் 15 முதல் (வெள்ளிக்கிழமை) அமலுக்கு வந்துள்ளன.
பாரத ஸ்டேட் வங்கி (எஸ்பிஐ) அதன் விளிம்புநிலை நிதி அடிப்படையிலான கடன் விகிதங்களை (எம்சிஎல்ஆர்) உயர்த்துவதாக அறிவித்துள்ளது. எஸ்பிஐ மூன்று மாத எம்சிஎல்ஆர் விகிதத்தை 7.15 சதவீதத்தில் இருந்து 7.35 சதவீதமாக உயர்த்தியுள்ளது. அதே நேரத்தில், ஆறு மாத எம்சிஎல்ஆர் விகிதம் 7.45 சதவீதத்தில் இருந்து 7.65 சதவீதமாக உயர்த்தப்பட்டுள்ளது. அதேபோல ஓராண்டுக்கான 7.7 சதவீதம் 7.5 சதவீதமாகவும், இரண்டு ஆண்டுக்கான எம்சிஎல்ஆர் விகிதம் 7.7 சதவீதத்தில் இருந்து 7.9 சதவீதமாகவும், மறுபுறம், மூன்று ஆண்டுகளுக்கு 7.8 சதவீதம் 8 சதவீதமாக உயர்த்தப்பட்டுள்ளது.
1 மாத எம்சிஎல்ஆர் விகிதம் –
3 மாத எம்சிஎல்ஆர் விகிதம் – 7.35%
6 மாத எம்சிஎல்ஆர் விகிதம் – 7.65%
1 வருடத்திற்கு – 7.9%
2 வருடத்திற்கு – 7.9%
3 வருடத்திற்கு – 8%
பெரும்பாலான நுகர்வோர் கடன்களின் வட்டி விகிதங்கள் இந்த MCLR இன் அடிப்படையில் நிர்ணயிக்கப்படுகின்றன என்பதை அறிந்துக்கொள்ளுங்கள். எஸ்பிஐயின் இந்த அறிவிப்புக்குப் பிறகு, கடன் வாங்குபவர்களின் இஎம்ஐ மீதான சுமை அதிகரிக்கும். கடன் வாங்குபவர்கள் இப்போது முன்பை விட அதிக வட்டி விகிதத்தில் கடனை திருப்பிச் செலுத்த வேண்டும்.
நாட்டில் நிலவிவரும் சில்லறை பணவீக்கத்தை கட்டுக்குள் கொண்டு வர, இந்திய ரிசர்வ் வங்கி (RBI) ரெப்போ வட்டி (Repo rate) விகிதத்தை 50 அடிப்படை புள்ளிகள் உயர்த்தி 5.4 சதவீதமாக அறிவித்துள்ளது. சில்லறை பணவீக்கத்தை கட்டுப்படுத்தும் நோக்கத்துடன் நடப்பு ஆண்டில் கடந்த மே மற்றும் ஜூன் மாதங்களில் வங்கிகளுக்கு வழங்கும் ரெப்போ வட்டி விகிதத்தை இரண்டு முறை உயர்த்தியது. தற்போது மூன்றாவது முறையாக ரெப்போ வட்டி விகிதத்தை ரிசர்வ் வங்கி உயர்த்தியுள்ளது. இதைத் தொடர்ந்து பல வங்கிகள் வீட்டுக் கடனுக்கான வட்டி விகிதத்தை உயர்த்தியுள்ளன.