இந்தியா தனது 76வது சுதந்திர தினத்தை கொண்டாடும் நிலையில், இந்திய கடற்படை போர்க்கப்பல்கள் ஆறு கண்டங்கள், மூன்று பெருங்கடல்கள் மற்றும் ஆறு வெவ்வேறு நேர மண்டலங்களில் மூவர்ண கொடியை ஏற்றியுள்ளன. இந்திய கடற்படை போர்க்கப்பல்கள் ஆகஸ்ட் 15 அன்று பல்வேறு துறைமுகங்களை அடைந்து இந்திய புலம்பெயர்ந்தோர் மற்றும் பிற உயர்மட்ட தலைமைகள் மற்றும் சம்பந்தப்பட்ட நாட்டின் உள்ளூர் பிரதிநிதிகள் முன்னிலையில் இந்திய மூவர்ணக்கொடியை ஏற்றியது.
ஒரு வீடியோவை ட்வீட் செய்த இந்திய கடற்படை, “75 ஆண்டு சுதந்திரத்தை கொண்டாடும் வகையில், இந்திய கடற்படை போர்க்கப்பல்கள் ஆறு கண்டங்கள், மூன்று பெருங்கடல்கள் மற்றும் ஆறு வெவ்வேறு நேர மண்டலங்களில் மூவர்ணக் கொடிய ஏற்றி வணக்கம் செலுத்தின.” என பதிவிட்டு அதன் கணகவர் வீடியோவையும் பகிர்ந்து கொண்டுள்ளது. சுதந்திர தின அமுத பெருவிழாவை கொண்டாடுவதற்காக ஞாயிற்றுக்கிழமை கென்யாவின் மொம்பாசா துறைமுகத்திற்கு INS தபார் வந்தடைந்தது குறிப்பிடத்தக்கது. இந்த பயணத்தின் போது, கப்பல் மற்றும் பணியாளர்கள் மொம்பாசா நகரில் பல கொண்டாட்டங்களில் பங்கேற்க திட்டமிடப்பட்டது.
15 Aug 22
Celebrating @75 years of #Independence, #IndianNavy #warships hoist the #Tricolour across 6 Continents, 3 Oceans & 6 different Zones saluting the spirit of #Tiranga.#IndiaAt75 #AzadiKaAmritMahotsav #BridgesofFriendship#MaritimePartnership pic.twitter.com/h2beppN5lh
— IN (@IndiannavyMedia) August 15, 2022
மேலும், வரலாற்று சிறப்புமிக்க 75வது சுதந்திர தினத்தை முன்னிட்டு போர்க்கப்பலான ஐஎன்எஸ் சத்புரா தனது தள துறைமுகத்தில் இருந்து வட அமெரிக்க கண்டத்தை நோக்கி சுமார் 10,000 கடல் மைல் தொலைவில் பயணித்தது. இது தவிர, சான் டியாகோ அமெரிக்க கடற்படை தளத்தில் போர்க்கப்பல் 75 சுற்றுகள் கொண்ட “ஆசாதி கா அம்ரித் மஹோத்சவ் ரன்” நடத்தும் என்று இந்திய கடற்படை தெரிவித்துள்ளது. இந்தியாவின் சுதந்திரத்திற்காக தியாகம் செய்த அந்த 75 மாவீரர்களுக்கு இந்த நிகழ்ச்சி அர்ப்பணிக்கப்பட்டுள்ளது.
ஆசாதி கா அம்ரித் மஹோத்சவ் என்பது 75 ஆண்டுகால சுதந்திர வரலாறு மற்றும் இந்தியாவின் மக்கள், கலாச்சாரம் மற்றும் சாதனைகளின் புகழ்பெற்ற வரலாற்றைக் கொண்டாடுவதற்கும் நினைவுகூருவதற்கும் இந்திய அரசாங்கத்தின் முன்முயற்சியாகும். மக்களின் இதயங்களில் தேசபக்தியின் உணர்வைத் தூண்டி, மூவர்ணக் கொடி பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்துவதே இந்த முயற்சியின் பின்னணியில் உள்ள யோசனை.
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ