'அங்கு சென்றுவந்த பிறகுதான் மாறிவிட்டான்' சல்மான் ருஷ்டியை கத்தியால் குத்தியவரின் தாய் வேதனை!


பிரபல எழுத்தாளர் சல்மான் ருஷ்டியை 24 வயதான ஹாடி மாதர் எனும் இளைஞர் கத்தியால் பலமுறை குத்தினார்.

சர்ச்சைக்குரிய ‘The Satanic Verses’ என்ற புத்தகத்தை எழுதியதால் இஸ்லாமியர்களின் கோபத்துக்கு ஆளானவர் சல்மான் ருஷ்டி.

லெபனான் பயணத்திற்குப் பிறகு தனது மகன் மாறிவிட்டதாக சல்மான் ருஷ்டியைக் கத்தியால் குத்திய நபரின் தாய் கூறியுள்ளார்.

இந்தியாவில் பிறந்த பிரபல பிரித்தானிய எழுத்தாளரான சல்மான் ருஷ்டி (75), நியூயார்க்கில் கடந்த வெள்ளிக்கிழமை நடந்த ஒரு இலக்கிய நிகழ்வில் சொற்பொழிவு செய்யவிருந்தபோது 24 வயதான ஹாடி மாதர் (Hadi Matar) மேடைக்கு விரைந்து வந்து அவரை பலமுறை கத்தியால் குத்தினார்.

இதையும் படிங்க: வங்கி வாசலில் பிச்சையெடுத்துக்கொண்டிருந்த பெண்ணுக்கு லொட்டரியில் அடித்த அதிர்ஷ்டம்! 

அவர் உடனடியாக மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்ட நிலையில், சிகிச்சைக்குப் பிறகு இப்போது அபாயகட்டத்தை தாண்டி நலமாக இருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

சம்பவ இடத்திலேயே ஹாடி மாதர் கட்டுப்படுத்தப்பட்டு பொலிஸிடம் ஒப்படைக்கப்பட்டார். அவர் மீதான விசாரணை நடந்துவருகிறது.

இந்த கொலை முயற்சிக்கும் தங்களுக்கும் எந்த தொடர்பும் இல்லை என ஈரானிய அரசு கூறிவிட்ட நிலையில், விசாரணை தொடர்ந்து நடைபெற்றுவருகிறது.

ஹாடி மாதர் ஒரு லெபனான் பெற்றோருக்கு அமெரிக்காவில் பிறந்தவர்.

இதையும் படிங்க: சல்மான் ருஷ்டியை தாக்கியவருக்கு குவியும் பாராட்டு: அதிரவைக்கும் ஈரானிய பத்திரிக்கைகளின் தலைப்புகள் 

ஹாடி மாதரின் தந்தை இந்த சம்பவம் குறித்து அல்லது தனது மகன் குறித்து எந்த தகவலையும் அளிக்கப்படாத, சந்தேக நபரின் தாய் சில்வானா ஃபர்டோஸ் சில முக்கிய தகவல்களைக் வெளியிட்டுள்ளார்.

இந்நிலையில், தனது மகன் தந்தையை பார்க்க லெபனான் நாட்டுக்கு சென்றுவந்த பிறகு மாறிவிட்டதாக கூறியுள்ளார்.

தனது தந்தையைப் பார்க்கச் சென்றதைத் தொடர்ந்து தனது வெளிப்படையாக இருக்கும் மகன் மனநிலை மாறி ஆழந்த சிந்தனையுடைய நபராக மாறியதாக கூறினார்.

“அவர் உத்வேகத்துடன் திரும்பி வருவார், படிப்பை முடித்து, பட்டம் மற்றும் வேலை பெறுவார் என்று நான் எதிர்பார்த்தேன். ஆனால் அதற்கு பதிலாக அவர் தனியாக பூட்டிக் கொண்டு வீட்டின் அடித்தளத்திலேயே இருந்தார். அவர் நிறைய மாறிவிட்டார், அவர் என்னிடமோ அல்லது அவரது சகோதரிகளிடமோ பல மாதங்களாக எதுவும் சொல்லவில்லை.., ஒரு கட்டத்தில் தன்னையும் அடித்தளத்திற்கு வரவிடாமல் தடுத்துவிட்டான். அவன் பகலில் தூங்குவான், இரவில் விழித்திருப்பான்” என்று கூறினார்.

“ஒரு முறை அவர் என்னுடன் வாதிட்டார், நான் ஏன் மதத்தில் கவனம் செலுத்தாமல் கல்வி பெற ஊக்குவித்தேன் என்று கேட்டு, சிறு வயதிலிருந்தே நான் இஸ்லாத்தை அவருக்கு அறிமுகப்படுத்தவில்லை என்று அவர் கோபமடைந்தார்” என்று அவர் கூறினார்.

வெள்ளிக்கிழமை நடந்த சம்பவத்திற்கு முன்பு, தான் சல்மான் ருஷ்டியைப் பற்றி கேள்விப்பட்டதே இல்லை என்றும் அப்பெண் கூறினார்.

“நான் அவருடைய எந்த புத்தகத்தையும் படித்ததில்லை. அப்படி ஒரு எழுத்தாளர் இருக்கிறார் என்று எனக்குத் தெரியாது. என் மகன் அவருடைய புத்தகத்தை எப்போதாவது படித்ததாக எனக்குத் தெரியாது,” என்று அவர் கூறினார்.

எப்படி இருந்தாலும், அவன் இல்லாமல் என் குடும்பம் நகரும் என்று கூறிய மாதரின் தாய், “எப்.பி.ஐ-யிடம் நான் சொன்னது போல், நான் அவனுடன் மீண்டும் பேசுவதை பற்றி கவலைப்பட போவதில்லை. அவனுடைய செயல்களுக்கு அவன்தான் பொறுப்பு. எனக்கு இன்னும் இரண்டு பிள்ளைகள் உள்ளனர், அவர்களை நான் கவனித்துக் கொள்ள வேண்டும். அவர்கள் வருத்தப்படுகிறார்கள், அவர்கள் அதிர்ச்சியடைந்தனர்” என்று கூறியுள்ளார்.



Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.