அதிரடியாக குறைந்த தங்கத்தின் விலை.. தங்கம் வாங்க இதுதான் சரியான நேரம்.!

தங்கம் விலை இன்று அதிரடியாக குறைந்துள்ளதால் பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். இன்று 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.472 குறைந்துள்ளது.

உலகம் முழுவதும் கடந்த ஆண்டு ஏற்பட்ட தொழில்துறை தேக்கத்தின் காரணமாக உலகம் முழுவதும் முதலீட்டாளர்கள் பாதுகாப்பான முதலீடுகளின் பக்கம் திரும்பி வருகின்றனர். பங்குச் சந்தை, ரியல் எஸ்டேட், அமெரிக்க டாலர்கள் என மற்ற பலவற்றில் இருந்த முதலீடுகளை தற்போது தங்கத்தின் மீது முதலீடு செய்து வருகின்றனர்.

அதனால், தங்கத்தின் தேவை அதிகரித்து வருகிறது. அதன் காரணமாகவே தங்கத்தின் விலை அவ்வப்போது ஏற்ற இறக்கம் நிலவி வந்த நிலையில் இன்று தங்கத்தின் விலை குறைந்துள்ளது.

அதன்படி, சென்னையில் இன்று ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.472 குறைந்து, ஒரு சவரன் ஆபரணத் தங்கத்தின் விலை ரூ.38,840-க்கு விற்பனை செய்யப்படுகிறது. ஆபரணத் தங்கத்தின் விலை கிராமுக்கு ரூ.59 குறைந்து, ஒரு கிராம் ஆபரணத் தங்கம் ரூ.4,855-க்கு விற்பனை செய்யப்படுகிறது.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.