சென்னை : நடிகர் ரஜினிகாந்த் திரையுலகில் தற்போது 47 ஆண்டுகளை நிறைவு செய்துள்ளார்.
இதையடுத்து திரையுலகினர், ரசிகர்கள் இதை கொண்டாடி வருகின்றனர். ட்விட்டர் ட்ரெண்டிங்கிலும் #47yearsofRajinism என்ற ஹேஷ்டேக் ட்ரெண்டாகி வருகிறது.
இதனிடையே அவரது இந்த வெற்றிக் கொண்டாட்டத்தில் அவரது மகள்களும் பங்கேற்றுள்ளனர்.
நடிகர் ரஜினிகாந்த்
நடிகர் ரஜினிகாந்த் வில்லனாகத்தான் தன்னுடைய வாழ்க்கையை துவங்கினார். அபூர்வ ராகங்கள் படத்தில் கேட்டை திறந்துக் கொண்டு வருவார் ரஜினி. அது அவருடைய சிறப்பான கேரியருக்கான கதவாக இருக்கப் போவது அவருக்கு அப்போது தெரிந்திருக்க வாய்ப்பில்லை. தொடர்ந்து தன்னை சூப்பர்ஸ்டாராக அவர் உயர்த்திக் கொண்டுள்ளார்.

வில்லனாக துவங்கிய பயணம்
முதலில் வில்லனாகத் தன்னுடைய பயணத்தை தொடர்ந்த ரஜினி, தொடர்ந்து கேரக்டர் ரோல்களிலும் கலக்கினார். ஒரு கட்டத்தில் அவர் நாயகனாகத்தான் நடிக்க வேண்டும் என்று இயக்குநர்கள் அடம்பிடித்தனர். தொடர்ந்து நாயகனாகத்தான் பார்க்க வேண்டும் என்று ரசிகர்களும் அடம்பிடிக்க துவங்கியது அவரது ஹீரோ பயணம்.

தொடர்ந்த வெற்றிப்பயணம்
தொடர்ந்து அவரது வெற்றிப் பயணம் துவங்கியது. முதலில் காதல் படங்களிலும் தொடர்ந்து அதிரடி ஆக்ஷன் படங்களிலும் ரசிகர்களை கவர்ந்தார். ஒரு அலட்சியமான ஆனால் ஸ்டைலான உடல்மொழி ரஜினியினுடையது. அது ரசிகர்களை வெகுவாக கவர்ந்தது. சிகரெட்டைக்கூட ஸ்டைலாக பிடித்தார் ரஜினி.

47 ஆண்டுகால ரஜினியிசம்
அவருடைய ஒவ்வொரு மேனரிசங்களும் ரசிகர்களால் கொண்டாடப்பட்டன. தற்போது சூப்பர்ஸ்டாராக தன்னுடைய 47 ஆண்டுகளை கடந்துள்ளார். இதையடுத்து #47yearsofRajinism என்ற ஹேஷ்டேக்கை ரசிகர்கள் தொடர்ந்து ட்ரெண்டாக்கி வருகின்றனர். பாராட்டுக்கள் குவிந்து வருகின்றன.

ஐஸ்வர்யா ரஜினி வாழ்த்து
இதனிடையே அவருடைய மகள்கள் ஐஸ்வர்யா மற்றும் சவுந்தர்யாவும் தங்களுடைய அப்பாவை வாழ்த்த தவறவில்லை. 47 ஆண்டுகள் ரஜினியிசம்.. கடின உழைப்பு மற்றும் அர்ப்பணிப்புக்கு கிடைத்தது இது. உங்கள் மகள் என்பதில் பெருமை கொள்கிறேன் என இன்ஸ்டாகிராம் பக்கத்தில் குறிப்பிட்டுள்ளார்.


சவுந்தர்யா ரஜினி வாழ்த்து
இதனிடையே சவுந்தர்யா ரஜினியும் தன்னுடைய தந்தைக்கு வாழ்த்துக்களை ட்விட்டர் மூலம் பகிர்ந்துள்ளார். 47 வருட மேஜிக். அப்பா நீங்கள் ஒரு தெய்வக்குழந்தை என்றும் வார்த்தைகளால் விவரிக்க முடியாத உணர்வு என்றும் கூறியுள்ள அவர் லவ் யூ தலைவா என்றும் குறிப்பிட்டுள்ளார்.