இடுப்பு பகுதியில் உள்ள அதிக சதையை கரைக்க வேண்டுமா? இந்த பயிற்சியை தொடர்ந்து செய்தாலே போதும்


பொதுவாக இடுப்புப் பகுதிக்கு எந்த வேலையும் கொடுக்காதபோது, கொழுப்பானது கரையாமல் அங்கேயே தங்கிவிடும். இடுப்புப் சதைப் பகுதி பெருத்துப்போய், டயர் போட்டது போல் ஆவதற்கு இதுதான் காரணம்.

சில பெண்களுக்கு, பிரசவத்திற்கு பிறகு ஏற்படும் ஈஸ்ட்ரோஜன் என்கிற ஹார்மோன் மாற்றங்களாலும் இடுப்பில் சதை போட்டு விடும்.

எனவே இவற்றை எளியமுறையில் குறைக்க கூடிய ஒரு உடற்பயிற்சியை எப்படி செய்வது என்பதை இங்கே பார்ப்போம். 

இடுப்பு பகுதியில் உள்ள அதிக சதையை கரைக்க வேண்டுமா? இந்த பயிற்சியை தொடர்ந்து செய்தாலே போதும் | Want To Lose Excess Fat Around The Waist

செய்முறை

  • விரிப்பில் நேராக நிற்கவும். இரண்டு கால்களுக்கு இடையில் சற்று இடைவெளி விட்டு நிற்கவும்.
  • வலது காலை பின்னால் நீட்டி முட்டியிலிருந்து பாதம் வரையில் தரையில் படுமாறு வைக்கவும். கைகளை மேல் நோக்கி உயர்த்தவும்.
  • இரண்டு உள்ளங்கைகளும் ஒன்றை ஒன்று பார்த்தவாறு இருக்க வேண்டும்.
  • நேராகப் பார்க்கவும்.

    வயிற்றுப் பகுதியை முன்தள்ளி முதுகை வளைத்து தலையையும் கைகளையும் பின்னால் சாய்த்தவாறும் இவ்வாசனத்தைப் பழகலாம்.

  • 20 வினாடிகள் இந்நிலையில் இருக்கவும். பின் ஆரம்ப நிலைக்கு இடது காலைப் பின்னால் வைத்துப் பயிலவும்.  

பலன்கள்

  • முதுகுத்தண்டு மற்றும் முதுகுத் தசைகளை பலப்படுத்துகிறது.
  • தோள்களை விரிக்கிறது. நுரையீரலைப் பலப்படுத்துகிறது.
  • வயிற்று உள் உறுப்புகளின் செயல்பாடுகளை மேம்படுத்துகிறது.
  • உடலின் ஆற்றலை வளர்க்கிறது.
  • இடுப்புப் பகுதியின் நெகிழ்வுத்தன்மையை அதிகரிக்கிறது.
  • இடுப்புப் பகுதியில் உள்ள அதிக சதையைக் கரைக்க உதவுகிறது.

குறிப்பு

தீவிர இடுப்புப் பிரச்சினை உள்ளவர்கள் மற்றும் தொடைப்பகுதியில் உள்ள தசையில் பாதிப்பு ஏற்பட்டிருந்தால் இவ்வாசனத்தைத் தவிர்க்கவும்.

கால் முட்டியில் வலி ஏற்பட்டால் விரிப்பை மடித்து காலுக்கடியில் வைத்துப் பழகலாம்.

  



Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.