இந்தியாவில் ஓலா எலக்ட்ரிக் கார் எப்போது? தமிழகத்தில் விறுவிறுப்பான தயாரிப்பு!

பெட்ரோல், டீசல் விலை விண்ணை முட்டி வரும் நிலையில் எலெக்ட்ரிக் வாகனங்களுக்கு உலகம் முழுவதும் மக்கள் மாறி வருகின்றனர் என்பதை பார்த்து வருகிறோம்.

குறிப்பாக இந்தியாவில் ஓலா எலக்ட்ரிக் ஸ்கூட்டர்கள் அதிக அளவில் பயன்பாட்டில் இருக்கும் நிலையில், விரைவில் எலக்ட்ரிக் கார் விற்பனைக்கு வர உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் ஓலா நிறுவனம் நேற்றைய சுதந்திர தினத்தில் இந்தியாவில் 2024ஆம் ஆண்டில் ஓலாவின் முதல் எலக்ட்ரிக் கார் மாடல் வெளியாகும் என அறிவித்துள்ளது.

எலக்ட்ரிக் ஸ்போர்ட்ஸ் கார்… ட்விட்டரில் டுவிஸ்ட் வைத்த ஓலா சி.இ.ஓ பவேஷ் அகர்வால்!

எலக்ட்ரிக் ஸ்கூட்டர்கள்

எலக்ட்ரிக் ஸ்கூட்டர்கள்

சரியாக ஒரு வருடத்திற்கு முன்பு போல எலக்ட்ரிக் ஸ்கூட்டர்கள் வினியோகத்தில் நுழைந்த ஓலா நிறுவனம் தற்போது மிகப் பெரிய அளவில் வளர்ச்சி அடைந்துள்ளது என்பது தெரிந்ததே. எலக்ட்ரிக் ஸ்கூட்டர்கள் டெலிவரி தாமதம் மற்றும் தீப்பிடித்த நிகழ்வுகள் நடந்த போதிலும் ஓலா எலக்ட்ரிக் ஸ்கூட்டர்களை அதிக அளவு மக்கள் வாங்கி வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.

எலக்ட்ரிக் கார்கள்

எலக்ட்ரிக் கார்கள்

இந்த நிலையில் எலக்ட்ரிக் ஸ்கூட்டர்களை அடுத்து எலக்ட்ரிக் கார்கள் தயாரிக்கும் திட்டத்தில் ஓலா நிறுவனம் மும்முரமாக உள்ளது என ஓலா நிறுவனத்தின் நிறுவனரும் தலைமை நிர்வாக அதிகாரியுமான பவிஷ் அகர்வால் தனது சமூக வலைத்தளத்தில் தெரிவித்துள்ளார். மேலும் எலக்ட்ரிக் கார்களின் விலை 1 லட்சம் முதல் 5 லட்சம் ரூபாய் வரையிலான விலையில் இருக்கும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

2024ஆம் ஆண்டு முதல் மாடல்
 

2024ஆம் ஆண்டு முதல் மாடல்

மேலும் கார்கள் தயாரிக்க வேண்டிய முழு வரைபடமும் எங்களிடம் உள்ளது என்றும் நாங்கள் எங்கள் நிறுவனத்தின் புதிய எலக்ட்ரிக் கார்களை 18 முதல் 24 மாதங்களில் வெளியிடுவோம் என்றும் அவர் தெரிவித்துள்ளார். எனவே 2024ஆம் ஆண்டு ஓலாவின் முதல் மாடல் எலக்ட்ரிக் கார் வெளிவர வாய்ப்பு உள்ளது.

இலக்கு

இலக்கு

2026 அல்லது 2027 ஆம் ஆண்டில் ஒரு வருடத்திற்கு ஒரு மில்லியன் கார்களை தயாரிக்க இலக்கு கொண்டுள்ளோம் என்றும் அவர் தெரிவித்துள்ளார். ஓலா தயாரிக்கும் எலக்ட்ரிக் கார்கள் நான்கே வினாடிகளில் 0-100 கிலோ மீட்டர் வேகத்தில் செல்லும் திறன் கொண்டிருக்கும் என்றும் ஒருமுறை சார்ஜ் செய்தால் 500 கிமீ வரை செல்லும் என்றும் அவர் தெரிவித்தார்.

இந்திய எலக்ட்ரிக் வாகன சந்தை

இந்திய எலக்ட்ரிக் வாகன சந்தை

உலகளாவிய வாகன உற்பத்தியாளர்கள் மத்தியில் இந்தியாவின் எலக்ட்ரிக் வாகன சந்தை மிகப் பெரிய அளவில் வளர்ந்து வருகிறது என்றும், புதிய இந்தியாவை வரையறுக்கும் வகையில் எங்களது தயாரிப்புகள் இருக்கும் என்றும், அச்சமின்றி எங்கள் நிறுவனத்தின் கார்களை பயன்படுத்தலாம் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

தமிழ்நாட்டில் தயாராகும் கார்கள்

தமிழ்நாட்டில் தயாராகும் கார்கள்

தமிழ்நாட்டில் கிருஷ்ணகிரி மாவட்டத்தில் ஒரே தளத்தில் மின்சார எலக்ட்ரிக் கார் உற்பத்தி நடைபெற்று வருவதாகவும் இந்த நிறுவனம் முழு அளவில் கார்கள் தயாரிப்பில் களத்தில் இறங்கி உள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கார்கள் - இருசக்கர வாகனங்கள்

கார்கள் – இருசக்கர வாகனங்கள்

ஒவ்வொரு ஆண்டும் 1 மில்லியன் கார்கள் மற்றும் 10 மில்லியன் இருசக்கர வாகனங்கள் ஆகியவை தயாரிக்க திட்டமிட்டிருப்பதாகவும் ஓலா நிறுவனம் தெரிவித்துள்ளது. மேலும் எங்களிடம் 200 உறுப்பினர்களை கொண்ட எலக்ட்ரிக் கார் தயாரிப்பு குழு உள்ளது என்றும், இதனை 1000 குழுவாக வளர்க்க திட்டமிட்டுள்ளோம் என்றும் ஓலா நிறுவனம் தெரிவித்துள்ளது.

வரவேற்பு

வரவேற்பு

கடந்த ஆண்டு ஓலா எலக்ட்ரிக் ஸ்கூட்டர்களை அறிமுகப்படுத்தி மக்கள் மத்தியில் மாபெரும் வரவேற்பை பெற்ற ஓலா நிறுவனம் 2024 ஆம் ஆண்டில் அறிமுகப்படுத்தும் எலக்ட்ரிக் கார்களுக்கும் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பு இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க
English summary

Ola to produce electric cars launch first model by 2024!

Ola to produce electric cars launch first model by 2024! | இந்தியாவில் ஓலா எலக்ட்ரிக் கார் எப்போது? தமிழகத்தில் விறுவிறுப்பான தயாரிப்பு!

Story first published: Tuesday, August 16, 2022, 7:30 [IST]

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.