சுதந்திர தினத்தை முன்னிட்டுச் செங்கோட்டையில் பிரதமர் நரேந்திர மோடி பேசுகையில் அடுத்த 25 ஆண்டுகளில் இந்தியாவை வளர்ந்த நாடாக மாற்ற வேண்டும் என்று முக்கியமான இலக்கை நிர்ணயம் செய்தார்.
2047-க்குள் இந்தியாவை வளர்ந்த நாடாக மாற்றும் லட்சிய இலக்கை பிரதமர் நிர்ணயித்து, இறக்குமதி சார்ந்திருப்பதைக் குறைப்பதற்கும், உள்நாட்டு உற்பத்தியை அதிகரிப்பதற்கும் புதுப்பிக்கப்பட்ட திட்டத்தை உருவாக்கினார்.
ஆனால் இந்தியாவை வளரும் நாடாக மாற்றுவது எப்படி..? வரும் தசாப்தத்தில் இந்தியாவை வளர்ந்த நாடாக மாற்ற அரசு அதிகாரிகளால் என்ன நடவடிக்கைகள் எடுக்க முடியும்..?
இறப்பை முன்பே கணித்த ராகேஷ் ஜூன்ஜூன்வாலா.. சொத்துக்களை என்ன செய்துள்ளார் தெரியுமா..?
வளர்ந்த பொருளாதார நாடு
இந்தியா எளிதில் வளர்ந்த பொருளாதாரமாக மாற முடியுமா..?அடுத்த 25 ஆண்டுகளில் அது நடக்குமா..? என்பதைத் தாண்டி இந்தியா குறைந்த வருமானம் கொண்ட நாட்டுகளின் பட்டியலில் இருந்து நடுத்தர வருமானம் கொண்ட நாடாக மாறியுள்ளோம் என்பதை நினைவில் கொள்ள வேண்டும். இந்த வளர்ச்சி எளிதாகச் சாத்தியப்படவில்லை என்பதையும் நினைவில் வைத்துக்கொள்ள வேண்டும்.
1947 முதல் வளர்ச்சி
1947ல் பிரிட்டிஷ் ஆட்சியில் இருந்து சுதந்திரம் பெற்ற போது இந்தியா ‘மூன்றாம் உலக’ நாடாக வகைப்படுத்தப்பட்டது. ஆனால் கடந்த ஏழு தசாப்தங்களில் இந்தியாவின் மொத்த உள்நாட்டு உற்பத்தி அதாவது ஜிடிபி வெறும் ரூ.2.7 லட்சம் கோடி ரூபாயில் இருந்து 150 லட்சம் கோடி ரூபாயாக வளர்ந்துள்ளது.
ஆறாவது பெரிய பொருளாதார நாடு
2.7 டிரில்லியன் அமெரிக்க டாலர் ஜிடிபி உடன் உலகின் ஆறாவது பெரிய பொருளாதாரமாக உள்ள இந்தியா தற்போது வளரும் நாடாக வகைப்படுத்தப்பட்டுள்ளது. மார்ச் 2023 இல் முடிவடையும் நடப்பு நிதியாண்டில் இந்தியா 7% க்கும் அதிகமாக வளரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இது பெரிய பொருளாதார நாடுகள் மத்தியில் அதிகப்படியான வளர்ச்சியாகும்.
லோவர் மிடில் இன்கம் நாடு
உலக வங்கி-யின் தரவுகள் அடிப்படையில் தற்போது இந்தியாவை லோவர் மிடில் இன்கம் வருமானம் கொண்ட பொருளாதாரமாக வகைப்படுத்துகிறது. அதாவது ஒரு நாட்டின் தனிநபர் மொத்த தேசிய வருமானம் $1,086 முதல் $4,255 வரை உள்ள நாடுகளுக்கான பட்டியலில் தான் இந்தியா உள்ளது. அமெரிக்கா போன்ற உயர் வருமானம் கொண்ட நாடுகளில் தனிநபர் வருமானம் $13,205 அல்லது அதற்கு மேல் உள்ளது.
தனிநபர் வருமானம்
உலக வங்கியின் தரவுகளின்படி, 2021ல் இந்தியாவின் தனிநபர் வருமானம் 2,277.4 டாலர் ஆக இருந்தது. சீனா, அமெரிக்கா மற்றும் இங்கிலாந்து போன்ற வளர்ந்த நாடுகளின் தனிநபர் வருமானம் $12,556.3, $69,287.5 மற்றும் $47,334.4 ஆக உள்ளது. இந்தியாவுக்கும் சீனாவுக்கு இடையில் சுமார் 10000 டாலர் வித்தியாசம் உள்ளது.
மனித மேம்பாட்டுக் குறியீடு
ஒரு வளர்ந்த நாடு என்றால் பொதுவாக ஒப்பீட்டளவில் உயர்ந்த பொருளாதார வளர்ச்சி, அனைத்துத் தரப்பு மக்களின் வாழ்க்கைத் தரம் மற்றும் அதிகத் தனிநபர் வருமானம் மற்றும் கல்வி, கல்வியறிவு மற்றும் ஆரோக்கியம் ஆகியவற்றை உள்ளடக்கிய மனித மேம்பாட்டுக் குறியீட்டில் (HDI) சிறப்பாகச் செயல்படுதல் ஆகியவை முக்கியக் காரணிகளாக உள்ளது.
சமத்துவமின்மை பிரச்சனை
இந்தியாவில் ஆழமாக வேரூன்றியுள்ள சமத்துவமின்மை நாட்டை வளர்ந்த நாடா மாற்ற முக்கியப் பிரச்சினையாக உள்ளது. இது கடந்த சில தசாப்தங்களாகப் படிப்படியாக உயர்ந்து, அனைவருக்குமான வளர்ச்சியின் இடத்தைச் சிறியதாக ஆக்குகிறது.
எழுத்தறிவு விகிதம்
இந்தியாவின் ஒட்டுமொத்த எழுத்தறிவு விகிதம் 1951 இல் வெறும் 18.3% இல் இருந்து 2018 இல் 74.4% ஆக மாறியுள்ளது. 2018 வரையிலான புள்ளிவிவரங்களின்படி, இந்தியாவின் ஆண்களின் கல்வியறிவு விகிதம் 82.4% ஆகவும், பெண்களின் கல்வியறிவு விகிதம் 65.8% ஆகவும் உள்ளது. இது நாட்டின் முக்கியமான பாலின சமத்துவமின்மையை எடுத்துக்காட்டுகிறது.
75 ஆண்டுப் பயணம்
25% க்கும் அதிகமான மக்கள் இன்னும் கல்வியறிவு பெறாத உலகிலேயே அதிக எண்ணிக்கையிலான படிப்பறிவில்லாத மக்கள் இந்தியாவிலும் உள்ளது. கடந்த 75 ஆண்டுகளில் இந்தியாவின் கல்வி முறை அபரிமிதமாக வளர்ந்துள்ளது என்பதில் சந்தேகமில்லை, ஆனால் வளர்ச்சி அடையப் பெரிய அளவிலான இடம் உள்ளது.
பல துறைகள்
இது கல்வி துறையில் மட்டும் இருக்கும் பிரச்சனை இதைத் தொடர்ந்து சுகாதாரம், உற்பத்தி, சேவைத் துறை, ஏற்றுமதி, மக்களின் வாழ்வாதாரம், வாழ்க்கை முறை, உள்கட்டமைப்பு, சுற்றுச்சூழல், நிலையான பொருளாதார வளர்ச்சி எனப் பல விஷயங்கள் உள்ளது.
மோடி அரசு அறிவிப்பை லாபமாக மாற்றும் முகேஷ் அம்பானி.. ஒரே கல்லில் இரண்டு மாங்காய்..!
When India becomes a developed country? Modi targets at 2047
When India become a developed country? Modi targets at 2047 இந்தியா-வின் உண்மையான நிலை என்ன..? எப்போது வல்லரசு ஆகும்..?