இனி ஊழியர்கள் ராஜ்ஜியம் தான்.. புட்டு புட்டு வைக்கும் சர்வே..!

இந்தியாவில் வொர்க் ப்ரம் ஹோம் அளவில் பெரும் மாற்றத்தை எதிர்கொண்டு வரும் நிலையில், ஊழியர்களும் சரி நிறுவனங்களும் சரி அறிந்துகொள்ள வேண்டிய முக்கியமான சந்தை ஆய்வின் முடிவுகள் உள்ளது.

வொர்க் ப்ரம் ஹோம் வேலைவாய்ப்புச் சந்தையில் மட்டும் அல்லாமல் வர்த்தகம், ரியல் எஸ்டேட், நுகர்வோர் சந்தை, ஊழியர்களின் சம்பளம், வேலைவாய்ப்புச் சந்தையில் பெண்களின் பங்கீடு எனப் பலதரப்பட்ட மாற்றங்கள் நிகழ்ந்துள்ளது.

இந்த வேளையில் Colliers மற்றும் Awfis இன் C-Suite கணக்கெடுப்பு முக்கிய புரிதல்களை நிறுவனங்களுக்கும், ஊழியர்களுக்கும் அளித்துள்ளது.

5 நாள் மட்டுமே வேலை செய்ய முடியும்.. ஊழியர்கள் கெடுபிடி, வழிக்கு வரும் நிறுவனங்கள்..!

C-Suite சர்வே

C-Suite சர்வே

Colliers மற்றும் Awfis இன் C-Suite சர்வே படி தற்போது இந்தியாவில் தோராயமாக 35 சதவிகித நிறுவனங்களில் 75 முதல் 100 சதவிகித பணியாளர்கள் அலுவலகத்திற்குத் திரும்பியுள்ளனர், அதாவது வீட்டில் இருந்து பணியாற்றுவதைத் தாண்டி அலுவலகத்திற்கு வந்து பணியாற்றத் துவங்கியுள்ளனர்.

 இரண்டு வருட இடைவெளி

இரண்டு வருட இடைவெளி

ஒவ்வொரு வாரமும் பணியாளர்கள் ஒரு சில தினங்கள் மட்டும் அலுவலகத்திற்கு வந்து பணியாற்றும் ஹைப்ரிட் மாடலில் பணியாற்றும் எண்ணிக்கையும் இந்த 35 சதவிகித நிறுவனங்கள் எண்ணிக்கையில் அடங்கும். இரண்டு வருட இடைவெளிக்குப் பிறகு, கொரோனா தொற்று எண்ணிக்கை குறைந்து வருவதால், அலுவலகங்களுக்குத் திரும்புவோர் எண்ணிக்கை வேகமெடுத்துள்ளது.

பகிர்ந்தளிக்கப்பட்ட பணியிடங்கள்
 

பகிர்ந்தளிக்கப்பட்ட பணியிடங்கள்

இந்த ஆய்வில் பங்குபெற்ற ஏறக்குறைய 74 சதவீத நிறுவனங்கள் பகிர்ந்தளிக்கப்பட்ட பணியிடங்களைத் தற்போது முக்கியமான கட்டமைப்பாகப் பார்க்கிறது. லொகேஷன் சென்ட்ரிக் அலுவலகக் கட்டமைப்புத் தற்போது பீப்புள் சென்ட்ரிக் அலுவலகக் கட்டமைப்பாக மாறி வருகிறது. மேலும் நிறுவனங்களின் உற்பத்தித் திறன் மேம்படுத்த ஊழியர்கள் சுதந்திரம் முக்கியமானதாக விளங்குகிறது என C-Suite கணக்கெடுப்புக் கூறுகிறது.

53 சதவீத நிறுவனங்கள்

53 சதவீத நிறுவனங்கள்

இந்த ஆய்வில் பங்குப்பெற்ற 53 சதவீத நிறுவனங்கள் தங்களது வளர்ச்சி திட்டத்தில் வொர்க் ப்ரம் ஹோம் மற்றும் அலுவலகப் பணி நேரம் கலப்பு முக்கியத் திட்டமாகக் கொண்டு உள்ளது. இந்தக் கலப்பு பணி கட்டமைப்பு ஊழியர்களின் வேலைத்திறன் மேம்படுத்த மிகப்பெரிய வாய்ப்பை அளிக்கிறது என நம்புகிறது.

ஊழியர்கள் ராஜ்ஜியம்

ஊழியர்கள் ராஜ்ஜியம்

ஊழியர்கள் சுதந்திரம் பெரிய அளவிலான பலனை அளிக்கும் காரணத்தால் நிறுவனங்கள் அதிகளவிலான தளர்வுகளையும், ஊழியர்களுக்கு ஏற்ற கட்டமைப்பை உருவாக்க நிறுவனங்கள் முடிவு செய்துள்ளது. இதன் மூலம் ஊழியர்களின் ஆதிக்கம் இனி இந்திய நிறுவனங்களில் ஓங்கும்.

சீன ஆதிக்கத்தை ஒடுக்கும் இந்தியா.. களத்தில் இறங்கும் மோடி அரசு..!

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க
English summary

Employee Freedom plays major role; C-Suite Survey reveal important facts

Employee Freedom plays major role; C-Suite Survey reveal important facts இனி ஊழியர்கள் ராஜ்ஜியம் தான்.. நிறுவனங்கள் நிலையை என்ன.. புட்டு புட்டு வைக்கும் சர்வே..!

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.