இரண்டு மணி நேரத்தில் பெண்ணாக மாறிய ஆண் – பல்லாவரத்தில் ஆச்சரியம்

இந்தியாவின் முன்னாள் குடியரசுத் தலைவரான அப்துல் கலாம் உலக சாதனைக்கான ஒப்பனை மராத்தான் இந்தியாவின் 75ஆவது சுதந்திர தினமான நேற்று (ஆகஸ்ட் 15)நடத்தப்பட்டது. இந்த நிகழ்ச்சியை ரைசிங் ஸ்டார்ஸ் மற்றும் பல்லாவரம் வேல்ஸ் பல்கலைக்கழகம் இணைந்து ஏற்பாடு செய்திருந்தது. இந்நிகழ்ச்சி பல்லாவரத்தில் உள்ள வேல்ஸ் பல்கலைக்கழகத்தில் நடைபெற்றது. 90 ஒப்பனைக் கலைஞர்கள்  பல்வேறுவிதமான ஒப்பனை கலைகளுடன் spectacular ramp walk  மூலம் அசத்தினர்.  

ஒப்பனை கலைஞர்கள் தங்கள் ஒப்பனை மற்றும் சிகை அலங்காரத்தை 2 மணி நேரத்தில் முடிக்க வேண்டும்  என்பது விதியாக இருந்தது குறிப்பிடத்தக்கது. 90 விதமான ஒப்பனை   கலைகளில் தலைசிறந்த ஒப்பனையாக ஆண் மாடலை பெண்ணாக தத்ரூபமாக மாற்றிய ஒப்பனைக் கலைஞர் அகத்தியா சிறந்த ஒப்பனை கலைஞராக தேர்வாகி  அப்துல் கலாம் உலக சாதனைப் புத்தகத்தில் இடம் பெற்றார்.

இந்த ஒப்பனை நிகழ்ச்சியில் பிரபல ஒப்பனை கலைஞர் செல்டன், திரையுலக பிரபலம் பிரியதர்ஷினி, எழுத்தாளர் லதா சரவணன், வேல்ஸ் பல்கலைக்கழக துணைவேந்தர் செல்வி பிரீதா கணேஷ் ஆகியோர்  நடுவர்களாக கலந்துகொண்டனர். இரண்டே மணி நேரத்தில் ஆணை மேக்கப் மூலமாக பெண்ணாக மாற்றிய அகத்தியாவுக்கு பலரும் வாழ்த்து தெரிவித்துவருகின்றனர்.

அதுமட்டுமின்றி போட்டியில் வெற்றி பெற்றவர் மேடையில் தோன்றியபோது அச்சு அசலாக பெண்போல் இருந்ததாகவும், இதன் மூலம் மேக்கப் துறையில் அகத்தியாவின் ஈடுபாடும், திறமையும் எவ்வளவு இருக்கிறது என்பதை புரிந்துகொள்ள முடிகிறது எனவும் போட்டியை ரசித்தவர்கள் கூறினர்.

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ 

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.