கோவை அருகே உடல்நலம் பாதிக்கப்பட்டுள்ள யானை தமிழக கேரள எல்லைப்பகுதியில் நிற்பதால் யார் மருத்துவ சிகிச்சை அளிப்பது என்று வனத்துறையினர் காலம் தாழ்த்தி வருவதாக மலைக்கிராம மக்கள் வேதனை தெரிவித்துள்ளனர்.
கோவை ஆனைகட்டி பட்டிசாலை என்கிற பகுதியில் தமிழக கேரளா எல்லையில் உடல் நலம் பாதிக்கப்பட்ட நிலையில் ஆற்றின் நடுவே காட்டு யானை நின்று கொண்டிருக்கிறது. இந்த யானைக்கு யார் சிகிச்சை அளிப்பது என இரு மாநில வனத் துறையினரும் குழப்பத்தில் உள்ளதால், சிகிச்சை அளிக்காமல் வேடிக்கை பார்ப்பதாக மலைக்கிராம மக்கள் குற்றம்சாட்டியுள்ளனர்.
தண்ணீர் குடிக்க முடியாமல் யானை சிரமப்படுவதாகவும், வாயில் அடிபட்டிருக்கலாம் என மக்கள் தெரிவிக்கின்றனர். மேலும் வனத்துறையினர் உடனடியாக சிகிச்சை மேற்கொள்ள வேண்டும் என கோரிக்கை வைத்துள்ளனர்.Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM