பாங்காக்:மியான்மரின், மக்களாட்சிக்கான தேசிய அமைப்பு கட்சியின் தலைவரும், அரசு ஆலோசகருமான ஆங் சான் சூச்சிக்கு மற்றொரு ஊழல் வழக்கில், அந்நாட்டு நீதிமன்றம் ஆறு ஆண்டு சிறை தண்டனை விதித்தது.
தென்கிழக்கு ஆசிய நாடான மியான்மரில், 2021ல் நடைபெற்ற தேர்தலில் சூச்சியின்,77, கட்சி வெற்றி பெற்றது. ஆனால், அவர் தேர்தல் மோசடியில் ஈடுபட்டதாக குற்றம்சாட்டிய ராணுவம், அவரை பதவியிலிருந்து நீக்கி ஆட்சியைக் கைப்பற்றியது. மேலும், தேசத்துரோகம், ஊழல் மற்றும் பிற குற்றச்சாட்டுகளுக்காக அவருக்கு 11 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்டது.
இதையடுத்து, அவர் வீட்டுக் காவலில் வைக்கப்பட்டார். இந்நிலையில், மற்றொரு வழக்கில் அவருக்கு ஆறு ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.இந்த வழக்கில் சூச்சி, தன்னுடைய அதிகாரத்தை பயன்படுத்தி, பொது நிலத்தை சந்தை விலையை விட குறைவான விலைக்கு வாடகைக்கு எடுத்து, நன்கொடைகள் வாயிலாக குடியிருப்பை கட்டியது, ரகசிய சட்டத்தை மீறியது மற்றும் பொது அமைதியின்மையை தூண்டியது உட்பட பல குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டன.
இந்த வழக்கில், அவருக்கு ஆறு ஆண்டு சிறை தண்டனை விதிக்கப்பட்டது. ஆனால், சூச்சி, தன் மீதான குற்றச்சாட்டுகளை மறுத்துள்ளார். அவருடைய வழக்கறிஞர்கள், இந்த தீர்ப்பு தொடர்பாக மேல்முறையீடு செய்யவுள்ளனர்.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement