முன்னாள் முதல்வர் ஜெயலலிதா மறைவுக்கு பிறகு, அதிமுக பொதுச் செயலாளர் பதவி யாருக்கு? என்கிற குழப்பம் நீடித்து வருகிறது. சசிகலா, டி.டி.வி தினகரன் ஆகியோரின் வருகைக்குப் பின்னர் இந்த பிரச்சனை உச்சத்துக்கு சென்ற நிலையில் பிரிந்திருந்த ஓபிஎஸ், இபிஎஸ் ஆகியோர் திடீரென இணைந்தனர்.
ஓபிஎஸ், இபிஎஸ் இருவரும் இணைந்த பிறகு சசிகலாவுக்கும், டிடிவி தினகரனுக்கும் கட்சியில் இடம் இல்லை என கூறி, அதிமுக தங்கள் கட்டுப்பாட்டில் கொண்டு வந்தனர்.
இதன் பின்னர் அதிமுக பொதுச்செயலாளர் பதவியை ஓபிஎஸ், இபிஎஸ் பிடிப்பதில் தங்களுக்குள் பனிப்போர் நடத்தினர். இந்த பஞ்சாயத்து முற்றியதை அடுத்து அதிமுகவில் ஒற்றைத்தலைமை குறித்து பேச்சு எழுந்து இருப்பதாக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் செய்தியாளர்களிடம் போட்டுடைத்தார்.
அரசுப்பள்ளியில் தேசிய கொடி ஏற்ற மறுத்த தலைமை ஆசிரியர்;நடவடிக்கை எடுக்கோரி கிராம மக்கள் புகார் மனு
இதற்கிடையே பெரும்பாலான பொதுக்குழு உறுப்பினர்களை தன் வசமாக இழுத்த எடப்பாடி பழனிச்சாமி அதிமுகவின் இடைக்கால பொதுச்செயலாளர் பதவியை பொதுக்குழுவை கூட்டி பெற்றுக்கொண்டார்.
அதிமுக பொதுக்குழு நடந்து கொண்டிருக்கும்போதே, ஓ.பி.எஸ் ஆதரவாளர்கள் அதிமுக தலைமை அலுவலகத்தை அடித்து நொறுக்கினர். இதில், டென்ஷன் ஆன எடப்பாடி பழனிச்சாமி தரப்பு
மற்றும் அவரது ஆதரவாளர்களை கட்சியில் இருந்தே நீக்கியது.
இதை சற்றும் எதிர்பாராத ஓபிஎஸ் தன்னை நீக்க யாருக்கும் அதிகாரம் இல்லை என கூறி, எடப்பாடி பழனிச்சாமி மற்றும் அவரது ஆதரவாளர்களை அதிமுகவில் இருந்தே நீக்குவதாக அறிவித்தார்.
அதோடு நிறுத்திக்கொள்ளாமல், எடப்பாடிக்கு எதிராக ஓ.பன்னீர்செல்வம் நீதிமன்றத்தில் சட்டப் போராட்டத்தை தொடங்கினார். இது தொடர்பான விசாரணை முடிவடைந்துள்ள நிலையில் தீர்ப்பு தேதி குறிப்பிடப்படாமல் தள்ளி வைக்கப்பட்டுள்ளது.
நீதிமன்றத்தில் முதற்கட்ட விசாரணையில் ஓபிஎஸ் பின்னடைவை சந்தித்தாலும் அடுத்தடுத்த விசாரணையில், ஓபிஎஸ்சுக்கு சாதகமாக மாறியுள்ளதாக தகவல் வெளியாகி இருக்கிறது.
எனவே நீதிமன்ற தீர்ப்பு எப்படி வருமோ? என்கிற பதற்றத்திலும் பரபரப்பிலும் எடப்பாடி பழனிச்சாமி உள்ள நிலையில் நீதிமன்ற தீர்ப்பு தனக்கு சாதகமாக வர வேண்டும் என்பதற்காக பல்வேறு நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருகிறார்.
இதன் ஒரு பகுதியாக கேரளாவுக்குச் சென்ற எடப்பாடியானவர் மலையாள மாந்திரீகத்தில் இறங்கியதாகவும், மிகுந்த பொருட்செலவில் மிருகங்களை பலியிட்டு பூஜைகள் நடத்தியதாகவும் சமூக ஊடகங்களில் தகவல் வெளியாகி உள்ளது.
இதனால் அதிமுக வட்டாரத்திலும், ஓ.பி.எஸ் தரப்பிலும் பெரும் பரபரப்பான சூழல் நிலவி வருகிறது. ஓபிஎஸ்சை பொறுத்தவரை ஆன்மிகம், பூஜைகளில் நாட்டம் உள்ளவர் என்பதால் அவரது தரப்பில் உள்ளவர்கள் பீதியில் உள்ளதாக கூறப்படுகிறது.
இதுகுறித்து எடப்பாடி ஆதரவு அதிமுக நிர்வாகி ஒருவர் கூறியதாவது: நீங்கள் சொல்வதுபோன்று கேரளாவில் பூஜைகள் நடந்ததாக எவ்வித தகவலும் எங்களுக்கு கிடைக்கவில்லை. ஓபிஎஸ் தரப்பில் இருந்து யாராவது இப்படி வதந்தி பரப்பியிருக்கலாம்.
இது, முழுக்க முழுக்க உண்மை. குறுக்கு வழியில் கட்சியை கைப்பற்றுகிற எண்ணம் எடப்பாடியாருக்கு துளியும் இல்லை. நீதித்துறை மீது எங்களுக்கு நம்பிக்கை இருக்கிறது. எடப்பாடியாரின் கை ஓங்கி இருப்பதை சகித்துக்கொள்ள முடியாமல் இப்படி கிளப்பி விடுகிறார்கள். இவ்வாறு அந்த நிர்வாகி கூறினார்.