ஏலத்தில் வாங்கிய சூட்கேஸ்களில் மனித எச்சங்கள் இருப்பதைக் கண்டு குடும்பத்தினர் அதிர்ச்சியடைந்தனர்.
ஏகப்பட்ட எச்சங்கள் இருப்பதால் பரிசோதனைக்கு அனுப்பப்பட்டுள்ளது.
நியூசிலாந்தின் ஆக்லாந்தில் உள்ள சேமிப்புக் கிடங்கு ஒன்றிலிருந்து, ஒரு குடும்பத்தினர் சூட்கேஸ் ஒன்றை ஏலத்தில் வாங்கியுள்ளனர். நிறைய விலைமதிக்கத்தக்க பொருட்கள் இருக்கலாம் என்ற ஆர்வத்தில், கனமாக இருந்த அந்த பெட்டியை வீட்டிற்கு கொண்டுசென்று திறந்து பார்த்தபோது, சூட்கேஸ் முழுக்க மனித எச்சங்கள் சேமிக்கப்பட்டிருப்பதைக் கண்டு அதிர்ச்சியடையுந்தனர்.
அவர்கள் உடனடியாக தகவல் கொடுத்ததையடுத்து, பெட்டியில் இருக்கும் மணித் எச்சங்கள் தொடர்பாக பொலிஸார் விசாரணையை தொடங்கியுள்ளனர்.
இந்த பெட்டியில் இருக்கும் எச்சங்களும், அத்தனை வாங்கிய குடும்பத்தினருக்கும் எந்த தொடர்பும் இல்லை என விசாரணையில் பொலிஸார் உறுதி செய்துள்ளனர்.
எச்சங்கள் சேமிக்கப்பட்டு பிரேத பரிசோதனை நடந்து வருகிறது, மேலும் தடயவியல் புலனாய்வாளர்கள் பலியானவர்களின் எண்ணிக்கையை தீர்மானிக்க முயற்சித்து வருகின்றனர் என்று பொலிஸார் தெரிவித்தனர்.
சூட்கேஸ் யாருடையது, உயிரிழந்தவர்கள் யார், எத்தனை பேர் உயிரிழந்துள்ளனர், அவர்களது அடையாளம் கண்டறிவதே காவல்துறையின் முன்னுரிமை. இதன் பின்னணியில் உள்ள முழு சூழ்நிலைகளையும் நாங்கள் வெளிகொண்டுவருவோம் என பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
New Zealand Herald
கைவிடப்பட்ட பொருட்கள், பெட்டிகள் ஏலம் விடுவது, செலுத்தப்படாத பில்களைக் கொண்ட சேமிப்பு கிடங்குகளில் ஒரு பொதுவான நடைமுறையாகும்.
இப்போது “இந்த சம்பவம் தொடர்பாக பொதுமக்களுக்கு உடனடி ஆபத்து எதுவும் இல்லை” என்று பொலிஸார் நம்புவதாக வாலுவா மேலும் கூறினார்.