சென்னை: ஐ.எப்.எஸ் நிறுவன மோசடி வழக்கில் மேலும் 2 முகவர்கள் பொருளாதார குற்றப்பிரிவு போலீசார் கைது செய்தனர். ரூ.6000 கோடி மோசடி வழக்கில் முகவர்கள் குப்புராஜ், ஜெகநாதன் ஆகியோரை கைது செய்தனர். ஐ.எப்.எஸ் நிறுவன மோசடி வழக்கில் ஏற்கனவே சரவணன் என்ற முகவர் கைது செய்யப்பட்ட நிலையில் மேலும் 2 பேரை கைது செய்தனர். மோசடி வழக்கில் தொடர்ந்து தலைமறைவாக உள்ள ஐ.எப்.எஸ் நிறுவன நிர்வாகிகளை போலீஸ் தேடி வருகின்றனர்.
