மணிரத்னம் இயக்கத்தில் பிரம்மாண்டமாக உருவாகிவரும் பொன்னியின் செல்வன் திரைப்படம் ஐ-மேக்ஸ் தொழில்நுட்பத்தில் வெளியாக இருப்பதாக படக்குழு தெரிவித்துள்ளது.
மிகவும் அகன்ற திரையில் தோன்றக்கூடிய தொழில்நுட்பமான ஐ-மேக்ஸ் தமிழில் முதல் முறையாக இந்தப் படத்தில் பயன்படுத்தப்பட்டுள்ளது.
கல்கியின் வரலாற்று புதினமான பொன்னியின் செல்வன் படத்தின் முதல் பாகம் செப்டம்பர் 30 ம் தேதி வெளியாக இருக்கிறது.
பொன்னியின் செல்வன் படத்தில் ஆதித்த கரிகாலனாக விக்ரம், வந்திய தேவனாக கார்த்தி, ராஜராஜ சோழனாக ஜெயம் ரவி, குந்தவையாக த்ரிஷா, நந்தினியாக ஐஷ்வர்யா ராய் உள்ளிட்டோர் இடம்பெற்றுள்ளனர்.
ஏ.ஆர். ரஹ்மான் இசையமைத்திருக்கிறார்.