ஒரு போதும் அந்த தவறை செய்ய மாட்டேன்.. பவிஷ் அகர்வால் பரபர கருத்து.. ஏன் இப்படி?

மின்சார வாகன உற்பத்தியில் நிச்சயம் ஒரு புரட்சியை ஏற்படுத்தும் என்ற பலத்த எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில், ஓலா நிறுவனம் தொடர்ந்து மின்சார வாகன உற்பத்தியில் கவனம் செலுத்தி வருகின்றது. தொடர்ந்து முதலீடுகளை அதிகப்படுத்த திட்டமிட்டு வருகின்றது.

இதற்கிடையில் இந்தியாவின் மிகப்பெரிய ரைட் ஹைலிங் நிறுவனமான ஓலாவின் நிறுவனர் பவிஷ் அகர்வால், ஓலா – உபெர் இணைப்பு குறித்து மீண்டும் மறுத்துள்ளார்.

சமீபத்தில் ஓலா மற்றும் உபெர் நிறுவனங்கள் இணைக்கப்படலாம் என தகவல்கள் வெளியாகின. எனினும் அதனை அப்போதே மறுத்த ஓலாவின் நிறுவனர் அகர்வால், தற்போது மீண்டும் இணைப்பு இல்லை என்பதை திட்டவட்டமாக தெரிவித்துள்ளார்.

மோசமான விளைவுகளைச் சந்திக்க நேரிடும்… ஊழியர்களை எச்சரித்த கூகுள்!

ஓலா - உபெர் இணைப்பு இல்லை

ஓலா – உபெர் இணைப்பு இல்லை

முன்னதாக ஒரு அறிக்கையில் ஓலா – உபெர் இணைப்பு குறித்து நாங்கள் எந்த பேச்சு வார்த்தையும் நடத்தவில்லை. ஓலா லாபகரமாக செயல்பட்டு வருவதாகவும், நன்றாக வளர்ச்சி கண்டு வருவதாகவும் கூறினார். மேலும் நாங்கள் தொடர்ந்து இந்த துறையில் முன்னணியில் இருந்து வருகின்றோம் என்றும் கூறியிருந்தார். மற்ற நிறுவனங்கள் இந்தியாவில் வணிகத்தினை நிறுத்திக் கொள்ள முற்பட்டாலும், நாங்கள் எங்கள் வனிகத்தினை தொடருவோம். அவர்களுடன் இணைய விரும்பவில்லை என்றும் கூறியிருந்தார்.

தீவிர முயற்சி

தீவிர முயற்சி

நாங்கள் எங்களது சேவையை ஊக்குவிக்க பல்வேறு வகையாக சலுகைகள், தள்ளுபடிகள், வணிகத்தினை மேம்படுத்துவதற்கான முயற்சிகளை மேம்படுத்தி வருகின்றோம் என அகர்வால் கூறியிருந்தது நினைவுகூறத்தக்கது.

இந்தியாவில் ஆன்லைன் ஆப் மூலமாக ஆட்டோ டாக்ஸி சேவையினை வழங்கி வரும் இந்த நிறுவனங்கள், இருபெரும் போட்டியாளர்களாக இருந்து வருகின்றன.

ஒரு போதும் வாங்க மாட்டேன்
 

ஒரு போதும் வாங்க மாட்டேன்

பெங்களூரினை தலைமையிடமாக கொண்ட ஓலாவின் நிறுவனர் பவிஷ் அகர்வால், அமெரிக்க நிறுவனமான உபெருடன் இணைப்பு இல்லை. என்னை நன்றாக தெரிந்தவர்களுக்கு இது தெரியும். நான் ஒருபோதும் நஷ்டம் தரும் நிறுவனத்தினை வாங்க மாட்டேன் என மீண்டும் கூறியுள்ளார்.

4 ஆண்டுகளுக்கு முன்பே இப்படி தான்

4 ஆண்டுகளுக்கு முன்பே இப்படி தான்

4 ஆண்டுகளுக்கு முன்பே இத்தகைய பேச்சுகள் எழுந்த நிலையில் அப்போதே மறுதிருந்த அகர்வால், தற்போதும் அதனையே கூறிவருகின்றார்.

கடந்த 2020ல் உபர் ஈட்ஸ் நிறுவனம் நஷ்டத்தில் இயங்கிய நிலையில், அதனை மற்றொரு உணவு டெலிவரி நிறுவனமான சோமேட்டோவுக்கு விற்பனை செய்தது. இந்த நிலையில் தற்போது ரைடிங் வணிகத்தினையும் உபெர் விற்பனை செய்யவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க

Read more about: ola uber ஓலா உபெர்

English summary

I will never acquire a loss making business: Ola’s bhavish aggarwal on Ola – Uber merger

I will never acquire a loss making business: Ola’s bhavish aggarwal on Ola – Uber merger/ஒரு போதும் அந்த தவறை செய்ய மாட்டேன்.. பவிஷ் அகர்வால் பரபர கருத்து.. ஏன் இப்படி?

Story first published: Tuesday, August 16, 2022, 13:34 [IST]

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.