கஞ்சா போதையில் நடுரோட்டில் ரகளை! சிறுவனுக்கு அடி உதை!

கந்திலி காவல் நிலையம் முன்பு கஞ்சா போதையில் சிறுவன் ரகளையில் ஈடுபட்டதால் மரத்தில் கட்டிவைத்து பொதுமக்கள் சரமடி அடி உதை கொடுத்துள்ளனர்.  திருப்பத்தூர் அடுத்த கந்திலி காவல் காவல் நிலையம் முன்பு கஞ்சா போதையில் சிறுவன் ஒருவன் அச்சாலையில் வரும் இருசக்கர வாகனங்களை வழி மறைத்து ரகளை ஈடுபட்டு வந்தார். இதனை அப்பகுதியில் உள்ள சிலர் தங்களது தொலைபேசியில் படம் எடுத்தனர். மேலும் தொடர்ந்து ரகளையில்  ஈடுபட்ட அந்த வாலிபரை பிடித்து அப்பகுதி மக்கள் மரத்தில் கட்டி வைத்து தர்ம அடி கொடுத்தனர்.

இந்த வீடியோ சமூக வலைதளங்களிலும் வைரலாக சென்றுள்ளது.  இதுபோல் கஞ்சா போதையில் பொதுமக்களை அச்சுறுத்தும் வகையில் ஈடுபடுவதை காவல்துறை நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் பொதுமக்கள் கோரிக்கை வைத்துதுள்ளனர்.  மேலும் கந்திலி காவல் நிலையம் முன்பே இச்சம்பவம் நடைபெற்றதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

A Tamil Nadu school student found in drunken state and found using abusive words. Where are we heading ?

pic.twitter.com/lu7t4NRVOa

— G Pradeep (@pradeep_gee) August 16, 2022

தமிழகத்தில் மதுவிற்கு, கஞ்சாவிற்கும் சிறுவர்கள் அடிமையாவது நாளுக்கு நாள் அதிமாகி வரும் நிலையில் இந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.  போதையில் தான் என்ன செய்கிறோம் என்று தெரியாமல் அந்த சிறுவன் செய்யும் காரியத்திற்கு பலர் வருத்தங்களை தெரிவித்து உள்ளனர்.  இது போன்று சிறுவர்களை இந்த பழக்கத்தில் இருந்து விடுபட அரசு கடும் நடவடிக்கை எடுத்து போதை பொருட்கள் விற்போர் மீது கடும் நடவடிக்கை வேண்டும் எனவும் கேட்டுக்கொண்டுள்ளனர்.

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ 

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.