கணவன் மனைவி வாழ்வில் பிரச்னைகள் வந்து போவது என்பது இயல்பான ஒன்று தான் என்றாலும் அதை சகித்துக்கொள்ள முடியாதவர்கள் விவாகரத்திற்காக நீதிமன்றத்தை நாடுகின்றனர். அவர்களின் குறைகளை கேட்கும் நீதிமன்றம் பிரச்சனைக்கு ஏற்றவாறு தனது தீர்ப்பையும் வழங்குகிறது.
இப்படி இருக்கையில் இன்று நீதிமன்றம் வித்தியாசமான தீர்ப்பை வழங்கியுள்ளது.கணவரால் வீட்டில் அடிக்கடி பிரச்னை ஏற்படும்போது அவரை வெளியேற்றினால்தான் அமைதி நிலவும் என்றால், அதற்கான உத்தரவை நீதிமன்றங்கள் பிறப்பிக்கலாம் என ஐகோர்ட் தெரிவித்துள்ளது அனைவரையும் அதிர்ச்சில் ஆழ்த்தியுள்ளது.
விவாகரத்து வழக்கு நிலுவையில் இருக்கையில், கணவர் வீட்டை விட்டு வெளியேற கேட்டு மனைவி மனுதாக்கல் செய்ததில் குடும்பநல நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவுக்கு எதிரான வழக்கில் ஐகோர்ட் உத்தரவிட்டுள்ளது. ஐகோர்டின் இந்த வழக்கை விசாரித்த நீதிபதி மஞ்சுளா “ஒரே வீட்டில் கணவனும் மனைவியும் இருக்கும்போது கணவரால் தனக்கு அச்சுறுத்தல் இருப்பதாக மனைவி அச்சம் தெரிவித்தால், நீதிமன்றம் ஒரே வீட்டில் இருக்கலாம் ஆனால் கணவன் மனைவியை துன்புறுத்தக் கூடாது என்று உத்தரவிட முடியாது என்று குறிப்பிட்டுள்ளார்.
அதனால் கணவர் வேறு இடத்துக்கு மாற வேண்டும் இல்லை என்றால் காவல்துறையின் உதவியோடு வேறு இடத்துக்கு கணவன் மாற்றப்பட வேண்டும் என்று உத்தரவிட்டுள்ளார். கணவனின் நடவடிக்கைகள் மனைவியால் சகித்துக் கொள்ள முடியாத அளவு உள்ளதாகவும் குறிப்பிட்டுள்ள நீதிபதி, ஒரு பெண் தான் சுதந்திரமாக வாழவும் சுதந்திரமாக தனது பணிகளை மேற்கொள்ளும் போது அதை அவருடைய கணவர் இடையூறு ஏற்படுத்தினால் அது மோசமாக இருக்கும் என்றும் குறிப்பிட்டுள்ளார். மேலும் தனது தீர்ப்பில், கணவரால் வீட்டில் அடிக்கடி பிரச்சனை ஏற்படும்போது அவரை வீட்டிலிருந்து வெளியேற்றினால்தான் அமைதி நிலவும் என்ற பட்சத்தில் அவர்களை வெளியேற்றுவதற்கான உத்தரவை நீதிமன்றங்கள் பிறப்பிக்கலாம் என தெரிவித்துள்ளார்.
நீதிபதியின் இந்த தீர்ப்பு பலரை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.