குஜராத்: குஜராத்தில் கர்ப்பிணியை கூட்டு பாலியல் தொல்லை செய்த கைதிகள் 11 பேரை விடுதலை செய்ததையடுத்து மனிதநேய மக்கள் கட்சி கண்டனம் தெரிவித்துள்ளனர். குஜராத் கலவரத்தின்போது கர்ப்பிணியை கூட்டு பாலியல் செய்த வழக்கில் ஆயுள் தண்டனை கைதிகள் 11 பேர் விடுதலை பெற்றனர். இந்தியாவில் மிக மோசமான கலவரம் 2002-ல் குஜராத்தில் சிறுபான்மை முஸ்லிம்கள் மீது நடத்தப்பட்டதாகும். கலவரத்தின்போது கர்ப்பிணியை வன்கொடுமை செய்து அவரது குடும்பத்தை சேர்ந்த 7 பேரை படுகொலை செய்தனர்.
