நான்கு மாதங்களுக்கும் மேலாக போராட்டக்காரர்களால் பயன்படுத்தப்பட்ட காலி முகத்திடல் பகுதியை ,நகர அபிவிருத்தி அதிகார சபையின் அனுமதியுடன் மாத்திரமே பொது நிகழ்வுகளுக்கு பயன்படுத்த முடியும் என்று அதிகார சபை அறிவித்துள்ளது.
அறிவிக்கப்பட்ட “போராட்ட மைதானம்” இனிமேல் இருக்காது.
நகர அபிவிருத்தி அதிகார சபையின் பணிப்பாளர் நாயகம் பிரசாத் ரணவீர இது குறித்து தெரிவிக்கையில்…
“இந்த நிலம் நகர அபிவிருத்தி அதிகார சபைக்கும், அரசாங்கத்துக்கும் சொந்தமானது. இந்தப் பகுதியில் புட்களை நட்டி இருந்தோம். ஆனால் இந்தப் பகுதி மீண்டும் மறுசீரமைக்கப்பட வேண்டிய நிலையில் உள்ளது. இதை காலி முகத்திடல் மைதானத்துடன் இணைந்த புல்வெளியாக பராமரிக்கும் பணியில் ஈடுபட்டுள்ளோம்” என்றார்.
அத்துடன், இந்த நிலத்தை எந்தவொரு தரப்பினருக்கும் குத்தகைக்கு வழங்கவோ அல்லது முதலீட்டுக்கு ஒதுக்கவோ திட்டம் இல்லை என்றும் அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.