குக் வித் கோமாளி சீசன் 3 இறுதிப்போட்டியில் பங்கேற்காத ரக்ஷன்.. காரணம் என்னன்னு தெரியுமா?

சென்னை : விஜய் டிவியின் முக்கியமான நிகழ்ச்சியான குக் வித் கோமாளி தற்போது 3வது சீசனை வெற்றிகரமாக நிறைவு செய்துள்ளது.

இந்த நிகழ்ச்சியின் தொகுப்பாளராக சிறப்பாக நிகழ்ச்சியை வழிநடத்தி சென்றவர் ரக்ஷன். இவர் இறுதிப்போட்டியில் பங்கேற்கவில்லை.

இதுகுறித்து ரசிகர்கள் தொடர்ந்து கேள்விகள் எழுப்பிவந்த நிலையில், தற்போது அதற்கு விடை கிடைத்துள்ளது.

குக் வித் கோமாளி நிகழ்ச்சி

விஜய் டிவியின் பிரம்மாண்ட நிகழ்ச்சிகளில் ஒன்றாக உள்ளது குக் வித் கோமாளி நிகழ்ச்சி. இந்த நிகழ்ச்சி ரசிகர்களின் ஸ்ட்ரெசை குறைக்கும் வகையில் அமைந்துள்ளதால், ஆண்டுதோறும் இந்த நிகழ்ச்சியை ஒளிபரப்ப வேண்டும் என்று பல்வேறு தரப்பினரும் கோரிக்கை வைத்து வருகின்றனர்.

தொகுப்பாளர் ரக்ஷன்

தொகுப்பாளர் ரக்ஷன்

தற்போது இந்த நிகழ்ச்சி 3 சீசன்களை கடந்துள்ளது. கடந்த 3வது சீசனில் மட்டுமில்லாமல் துவக்கத்திலிருந்தே இந்த நிகழ்ச்சியின் கோமாளிகள், தொகுப்பாளர் மற்றும் நடுவர்கள் மாற்றப்படாமல்தான் உள்ளனர். நிகழ்ச்சியை சிறப்பாக வழிநடத்தி சென்றார் தொகுப்பாளர் ரக்ஷன்.

இறுதிப்போட்டியில் பங்கேற்காத ரக்ஷன்

இறுதிப்போட்டியில் பங்கேற்காத ரக்ஷன்

சமயத்தில் பார்த்தால் கோமாளிகளுடன் லூட்டி அடித்தபடி காணப்படுவார். நடுவர்களை கலாய்ப்பார், போட்டியாளர்களிடமும் தொடர்ந்து ஏதாவது கமெண்ட் அடித்தபடி இருப்பார். இப்படி இந்த நிகழ்ச்சியின் சிறப்பிற்கு இவரும் காரணமாக அமைந்தார். இந்நிலையில் கடந்த குக் வித் கோமாளி சீசன் 3யின் பிரம்மாண்டமான இறுதிப்போட்டியில் இவர் பங்கேற்கவில்லை.

சிறப்பான இறுதிப்போட்டி

சிறப்பான இறுதிப்போட்டி

மிகவும் பிரம்மாண்டமாகவும் கலகலப்பாகவும் நடைபெற்ற இந்த பைனலில் டைட்டிலை வெற்றிக் கொண்டார் ஸ்ருதிகா அர்ஜுன், இரண்டாவது மற்றும் மூன்றாவது இடங்களை தர்ஷன் மற்றும் அம்மு அபிராமி பெற்றார். இதையடுத்து நெகிழ்ச்சியான மற்றும் சிறப்பான சம்பவங்களுடன் இந்த நிகழ்ச்சி நிறைவு பெற்றது.

ரக்ஷன் விளக்கம்

ரக்ஷன் விளக்கம்

ஆனால் இந்த நிகழ்ச்சயில் ரக்ஷன் பங்கேற்காதது மட்டுமே குறையாக இருந்தது. பல்வேறு கேள்விகளையும் எழுப்பியது. இந்நிலையில் சமீபத்திய தனது பேட்டியில் இதுகுறித்து ரக்ஷன் விளக்கம் அளித்துள்ளார். இறுதிப்போட்டியின் போது தனக்கு கடுமையான ஜுரம் ஏற்பட்டதாகவும் தனக்கு கொரோனா பாதித்ததா என்று சந்தேகம் எழுந்ததாகவும் அவர் கூறியுள்ளார்.

தனிப்பட்ட காரணங்கள்

தனிப்பட்ட காரணங்கள்

ஆனால் பரிசோதனையில் கொரோனா பாதிக்கவில்லை என்பது உறுதி செய்யப்பட்ட நிலையில், தனிப்பட்ட சில காரணங்களுக்காகவும் தன்னால் இறுதிப்போட்டியில் பங்கேற்கக முடியவில்லை என்று ரக்ஷன் தெரிவித்துள்ளார். சிறப்பாகவே நடந்து முடிந்துள்ளது குக் வித் கோமாளி சீசன் 3. அடுத்த சீசனுக்காக ரசிகர்கள் இப்போதே காத்திருக்க துவங்கியுள்ளனர்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.