கொளுத்தி போட்ட சிதம்பரம்?; கொழுந்துவிட்டு எரியும் பூசல்!

அகில இந்திய அளவில்

கட்சி மிக பலவீனமாக உள்ளது. எனவே காங்கிரஸ் கட்சியை பலப்படுத்தும் நடவடிக்கையில் தலைமை முடிவெடுத்து அதற்கான நடவடிக்கைகளில் தீவிரமாக ஈடுபட்டுள்ளது.

எந்தெந்த மாநிலங்களில் கட்சி தொய்வடைந்து உள்ளதோ? அந்தந்த மாநிலங்களில் பாதயாத்திரை, ஆலோசனை கூட்டம் என்று நடத்தி, கட்சியை மக்கள் மத்தியில் கொண்டு சேர்க்கவும் வியூகங்கள் வகுக்கப்பட்டுள்ளது.

அதேபோல் மந்தமான செயல்பாடு உள்ள தலைவர்களை மாற்றிவிட்டு சுறுசுறுப்பாக, அதே சமயம் நுணுக்கமான அரசியல் செய்யக்கூடிய தலைவர்களை நியமிக்க காங்கிரஸ் மேலிடம் முடிவு செய்துள்ளது.

எனக்கு வாய் நீளமா? சீறிய அமைச்சர் மா.சுப்பிரமணியன்!

இதன் ஒரு பகுதியாக ராகுல் காந்தி தான் காங்கிரஸ் தலைவராக பதவி ஏற்க வேண்டும் என, தொண்டர்கள் மற்றும் மேல்மட்ட தலைவர்கள் தொடர்ந்து கோரிக்கை விடுத்து வந்தனர்.

ஆனால் தலைவர் பதவியை ஏற்க ராகுல் காந்தி மறுத்து விட்டதாக கூறப்படுகிறது. இந்நிலையில் அவருக்கு அடுத்தபடியாக கட்சியின் தூணாக இருக்கும் விதமாக ஒருவரை நியமிக்க வேண்டும் என கோரிக்கை எழுந்துள்ளது.

அதே சமயம், ராஜிவ் குடும்பத்தில் இருந்து ஒருவர் இருந்தால் மட்டுமே, கட்சியை காப்பாற்ற முடியும் என்று 2ம் கட்ட தலைவர்கள் கருகின்றனர். இதனை சோனியா காந்தியிடம் பக்குவமாக பேசி இருப்பதாகவும், அதற்கு வேறு வழியில்லாமல் சோனியா காந்தி ஒப்புக்கொண்டதாகவும் காங்கிரஸ் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

ஆனாலும் கூட காங்கிரஸ் கட்சியில் சோனியா, ராகுலுக்கு அடுத்தபடியாக செல்வாக்கு மிகுந்தவர்கள் வரிசையில் ப.சிதம்பரம் முன்னிலையில் உள்ளதால் அவரை இடைக்கால தலைவராக அறிவிக்கவும் வாய்ப்பு உள்ளதாக கூறப்படுகிறது.

இதனை தொடர்ந்தே காங்கிரஸ் கட்சியின் தலைவர் பதவி தனக்கு கிடைக்க 101 சதவீதம் வாய்ப்பு இருப்பதாக முன்னாள் மத்திய அமைச்சர் சிதம்பரம் திடீரென அறிவித்துள்ளார்.

இந்த விவகாரம் காங்கிரஸ் கட்சிக்குள் பெரும் சலசலப்பை ஏற்படுத்தி உள்ளது. காங்கிரஸ் கட்சியின் தலைவர் பதவி குறித்து கட்சி மேலிடம் இன்னும் முறையாக அறிவிப்பை வெளியிடப்படாமல் உள்ளது.

அப்படி இருக்கையில், 101 சதவீதம் நான்தான் அடுத்த தலைவர் என்று அறிவித்து இருப்பதை வைத்து பார்த்தால் காங்கிரஸ் கட்சியில் ப.சிதம்பரம் தலைவர் பதவி பெறப்போவது உண்மையாக கூட இருக்கலாம் என கூறப்படுகிறது.

ஒருபுறம் ப.சிதம்பரம் அறிவிப்பு கட்சியில் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கும் நிலையில் மறுபுறம் காங்கிரஸ் கட்சிக்குள் இப்போது கோஷ்டிகள் தகராறை துவக்கி இருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளது.

காங்கிரஸ் தலைவர் பதவி குறித்து கட்சியின் அகில இந்திய தலைமையே வாய் திறக்காத நிலையில் ப.சிதம்பரம் தன்னை முன்னிறுத்தி இருப்பதால் அவர் அறிவிப்புக்கு விளக்கம் கேட்க வேண்டும் என்றும், அவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் எதிர்கோஷ்டிகளின் குரல்கள் ஓங்கி ஒலிக்கின்றன.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.