தென் கிழக்கு மத்திய ரெயில்வே தனது மிக நீளமான சரக்கு ரெயிலான சூப்பர் வாசுகி ரெயிலை சோதித்து பார்த்தது.
ஐந்து சரக்கு ரெயில்களின் பெட்டிகளை ஒன்றிணைத்து 295 பெட்டிகளுடன் ஒரே ரயிலாக நேற்று சூப்பர் வாசுகி தனது வெள்ளோட்டத்தை தொடங்கியது.
27 ஆயிரம் டன் நிலக்கரியை ஏற்றிக்கொண்டு , மூன்றரை கிலோ மீட்டர் நீளத்திற்கு அந்த ரெயில் காட்சியளித்தது.
இதுவே, இந்திய ரெயில்வே இயக்கிய அதிகளவு நிலக்கரியை ஏற்றிச்சென்ற மிக நீளமான சரக்கு ரயிலாகும்.
சத்தீஷ்கர் மாநிலத்தின் பிலாய் நகரில் இருந்து கோர்பா நகர் வரை இந்த சூப்பர் வாசுகி ரயில் இயக்கப்பட்டது.