சாத்தான்குளம் வழக்கு: சிபிஐ கூடுதல் குற்றப்பத்திரிகையில் அதிர்ச்சி தகவல்கள்

சாத்தான்குளம் தந்தை, மகன் கொலை வழக்கில் சிபிஐ தாக்கல் செய்த கூடுதல் குற்றப்பத்திரிகையில் அதிர்ச்சி தகவல்கள் வெளிவந்துள்ளன. தூத்துக்குடி மாவட்டம் சாத்தான்குளத்தை சேர்ந்த வணிகர்களான தந்தை மகன் ஜெயராஜ் – பென்னிக்கிஸ் கடந்த 2020 ஆம் ஆண்டு ஜூன் 19 ஆம் தேதி காவல்துறை விசாரணைக்கு அழைத்து செல்லப்பட்ட நிலையில் விசாரணையின் போது காவல்துறையினர் தாக்கியதில் இருவரும் உயிரிழந்தனர். இருவர் உயிரிழந்தது தொடர்பாக எழுந்த குற்றச்சாட்டின் கீழ் தொடரடப்பட்ட கொலை வழக்கில் சாத்தான்குளம் காவல்நிலைய ஆய்வாளர்  ஸ்ரீதர், சார்பு ஆய்வாளர்கள் பாலகிருஷ்ணன், ரகுகணேஷ் உள்ளிட்ட 9 பேரின் மீது சிபிஐ தரப்பில் குற்றபத்திரிக்கை தாக்கல் செய்யப்பட்டது.

இந்நிலையில் இந்த வழக்கின் விசாரணையானது கடந்த வெள்ளிக்கிழமை மதுரை மாவட்ட முதலாவது கூடுதல் நீதிமன்றத்தில் நீதிபதி நாகலட்சுமி முன்பாக நடைபெற்றது. அப்போது இந்த வழக்கு தொடர்பாக, சிபிஐ தரப்பில் வழக்கில் ஏற்கனவே முதற்கட்டமாக 2027 பக்க குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டிருந்த நிலையில் இரண்டாம் கட்டமாக கூடுதலாக 400 பக்கம் அளவிலான குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டது. அவ்வாறு தாக்கல் செய்யப்பட்ட  குற்றப்பத்திரிக்கையில் சாத்தான்குளம் தந்தை மகன் கொலை வழக்கில், குற்றம் சாட்டப்பட்ட காவல்துறை அதிகாரிகள், 19.06.2020 அன்று மாலை, காமராஜர் பஜாரில்  இருந்து ஜெயராஜை சட்டவிரோதமாக அழைத்துச் சென்று,  அவர்கள் இருவரையும் சாத்தான்குளம் காவல் நிலையத்தில்  கொடூரமாக சித்திரவதை செய்து,  கடுமையான காயங்களை ஏற்படுத்தி உள்ளனர். அதன் பின்  தந்தை மகன் இருவர் மீதும்  பொய் வழக்கு பதிவு செய்து உள்ளனர்.

சாத்தான்குளம் காவல் நிலையத்தின் சுவர்களிலும் ,  தரையிலும் மற்ற இடங்களிலும் பரவிய பென்னிக்ஸ் மற்றும் ஜெயராஜ் ஆகியோரின் காயங்களில் இருந்து கசிந்த இரத்தத்தை சுத்தப்படுத்துமாறு குற்றம் சாட்டப்பட்ட காவல்துறை அதிகாரிகளால் இறந்த பென்னிக்ஸ் கட்டாயப்படுத்தப்பட்டுள்ளதாகவும், குற்றம் சாட்டப்பட்ட காவல்துறை அதிகாரிகள் மற்றும் ஒரு பொதுவான நோக்கத்துடன்  குற்றவியல் சதித்திட்டம் தீட்டி உள்ளனர் என்றும் தெரியவந்துள்ளது.

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ 

 

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.