சின்ன படங்கள்.. நம்மள நம்பித்தான் வருது.. ஓய்வெடுக்காமல் உழைத்த கெளசிக்.. பிக் பாஸ் அபிஷேக் உருக்கம்

சென்னை: யூடியூப் விமர்சகரும் சினிமா டிராக்கருமான கெளசிக் எல்.எம் நேற்று மாலை மாரடைப்புக் காரணமாக உயிரிழந்தது ஒட்டுமொத்த தென்னிந்திய சினிமா பிரபலங்களையும் சோகத்தில் ஆழ்த்தியது.

தமிழ் சினிமா நடிகர்களையும் தாண்டி டோலிவுட் நடிகர் நானி, மலையாள திரையுலகின் முன்னணி நடிகர் துல்கர் சல்மான் உள்ளிட்ட பலரும் கெளசிக் எல்.எம் உயிரிழந்த செய்தியை கேட்டு அதிர்ச்சி அடைந்தனர்.

இந்நிலையில், அவருடைய நண்பரும் பிக் பாஸ் பிரபலமுமான அபிஷேக் ராஜா கெளசிக் பற்றி பதிவிட்டு இருப்பது ரசிகர்களை உருக வைத்துள்ளது.

கெளசிக் மரணம்

வெறும் 35 வயதான யூடியூப் விமர்சகர் கெளசிக் எல்.எம் மாரடைப்பு காரணமாக உயிரிழந்தது ஒட்டுமொத்த ரசிகர்களையும் சோகத்தில் ஆழ்த்தி உள்ளது. ரசிகர்கள், மீடியா நண்பர்களை தாண்டி அவரது மறைவுக்கு ஏகப்பட்ட சினிமா பிரபலங்கள் தங்களது ஆழ்ந்த இரங்கலை தெரிவித்தனர்.

2 நாள் முன்னாடி கூட பேசினோமே

2 நாள் முன்னாடி கூட பேசினோமே

இயக்குநர் வெங்கட் பிரபு, நடிகர் கார்த்தி உள்ளிட்ட பல பிரபலங்கள் இரண்டு நாட்கள் முன்னர் கூட அவருடன் பேசினோமே நல்லா தானே இருந்தார். ஏன் இப்படி திடீர்னு என வாழ்க்கை ஒரு நிலையானது அல்ல என்பதை பதிவிட்டு சினிமா பிரபலங்கள் தங்களின் அதிர்ச்சியை வெளிப்படுத்தினர். மேலும், கெளசிக்கின் குடும்பத்திற்கு ஆறுதல் தெரிவித்தனர்.

பிக் பாஸ் அபிஷேக் சொன்ன விஷயம்

பிக் பாஸ் அபிஷேக் சொன்ன விஷயம்

சக யூடியூப் விமர்சகர் கெளசிக் எல்.எம் உயிரிழந்த நிலையில், பிக் பாஸ் பிரபலமும் ஓப்பன் பண்ணா யூடியூப் சேனலில் விமர்சனம் செய்து வருபவருமான அபிஷேக் ராஜா தனது ட்விட்டர் பக்கத்தில் தொடர்ந்து கெளசிக் பற்றிய விஷயங்களை பதிவிட்டு வருகிறார். கெளசிக் ஓய்வின்றி உழைக்கக் கூடியவர் என அதற்கான உதாரணத்தையும் அவர் கூறியுள்ளார்.

சின்ன படங்களுக்காக உழைக்கணும்

சின்ன படங்களுக்காக உழைக்கணும்

லீவு வந்தா ஜாலியா வெளியே போயிட்டு வரலாம் வா தலன்னு கூப்பிட்டா கூட அவர் வரமாட்டாரு.. அப்படி கடுமையா உழைப்பாரு.. சின்ன படங்கள் எல்லாம் நம்மள நம்பித்தான் வருது. அதுக்காக கொஞ்சம் புரமோஷன் பண்ண அந்த படத்துக்கு வர ஆடியன்ஸ் இம்ப்ரெஸன் கூடும்னு சொல்லுவார் என கெளசிக் பற்றி அபிஷேக் ராஜா உருக்கமாக ட்வீட் போட்டுள்ளார்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.