சென்னை: சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் தனுஷ் நடித்துள்ள திருச்சிற்றம்பலம் திரைப்படம் இந்த வாரம் வெளியாகிறது.
தனுஷ், நித்யா மேனன், பிரியா பவானி சங்கர், ராஷி கன்னா, பாரதிராஜா மற்றும் பிரகாஷ் ராஜ் என நட்சத்திர பட்டாளமே இதில் நடித்துள்ளனர்.
இந்த படத்திற்கு தனுஷ் வாங்கிய சம்பளம் பற்றிய தகவல்கள் தற்போது வெளியாகி பரபரப்பை கிளப்பி உள்ளது.
ரொம்ப வருஷமா
நடிகர் தனுஷ் தமிழ் சினிமாவில் ரொம்ப வருஷமா ஹீரோவாக நடித்து வருகிறார். இயக்குநர் வெற்றிமாறன் இயக்கத்தில் தனுஷ் நடித்த ஆடுகளம், அசுரன் படங்களுக்கு தேசிய விருதுகளும் கிடைத்துள்ளன. ஆனால், இன்னமும் நடிகர் தனுஷ் பெரிய அளவில் தனது சம்பளத்தை உயர்த்திக் கொள்ளவில்லை எனக் கூறப்படுகிறது.

தி கிரேமேனுக்கும் கம்மி
ரூசோ பிரதர்ஸ் இயக்கத்தில் ரியான் கோஸ்லிங் கிறிஸ் எவான்ஸ் நடித்த தி கிரேமேன் படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நனுஷ் மிரட்டி இருந்தார். ரியான் கோஸ்லிங் மற்றும் கிறிஸ் எவான்ஸுக்கு தலா 180 கோடி ரூபாய் சம்பளம் வழங்கப்பட்ட நிலையில், நடிகர் தனுஷுக்கு வெறும் 5 கோடி மட்டுமே சம்பளமாக கொடுக்கப்பட்டதாகவும் தகவல்கள் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தின.

திருச்சிற்றம்பலம் சம்பளம்
இந்நிலையில், தனுஷ் ஹீரோவாக நடித்துள்ள திருச்சிற்றம்பலம் படத்துக்கு வெறும் 15 கோடி தான் சம்பளம் வாங்கி உள்ளார் என்கிற தகவலும் தனுஷ் ரசிகர்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளன. சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் நடித்த ரஜினிகாந்த், விஜய் எல்லாம் 100 கோடி சம்பளத்தை கடந்த நிலையில், தனுஷ் இன்னமும் 15 கோடி தான் வாங்குகிறாரா என ரசிகர்கள் ஷாக் ஆகி உள்ளனர்.

சிவகார்த்திகேயனுக்கு அதிகம்
நடிகர் சிவகார்த்திகேயனுக்கு மிஸ்டர் லோக்கல் படத்திலேயே 14 கோடி ரூபாய் சம்பளம் பேசப்பட்டதாக தகவல்கள் வெளியான நிலையில், தற்போது 25 கோடி வரை அவர் வாங்குகிறார் என்று கூறப்படுகிறது. இந்நிலையில், சிவகார்த்திகேயனை விட தனுஷின் மார்க்கெட் குறைவாக உள்ளதா? அல்லது ஏன் அவர் இன்னமும் சம்பளத்தை அதிகரிக்கவில்லை என கேள்விகள் கிளம்பி உள்ளன.

விஜய்சேதுபதிக்கு 30 கோடி
ஷாருக்கானின் ஜவான் இந்தி படத்தில் வில்லனாக நடிக்கவே விஜய்சேதுபதிக்கு 30 கோடி சம்பளம் பேசப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன நிலையில், பாலிவுட், டோலிவுட், ஹாலிவுட் என நடித்து வரும் தனுஷின் சம்பளம் அதிகரிக்காமல் இருப்பது அவரது ரசிகர்களை சோகத்தில் ஆழ்த்தி உள்ளது.

தயாரிப்பாளர்களுக்கு கஷ்டம் தரக்கூடாது
ஆனால், சம்பளத்தை தேவையில்லாமல் உயர்த்தி தயாரிப்பாளர்களுக்கு கஷ்டம் தரக்கூடாது என்பதற்காகவே நடிகர் தனுஷ் அதிரடியாக தனது சம்பளத்தை இஷ்டத்துக்கு உயர்த்திக் கொள்ளவில்லை என்றும், தயாரிப்பாளர்களின் நடிகராக இருப்பது தான் அவருடைய ஆசை என்றும் கூறுகின்றனர்.

ஓடிடி ரிலீஸ் காரணமா
நடிகர் தனுஷ் நடிப்பில் கடந்த சில ஆண்டுகளாக வெளியான ஜகமே தந்திரம், அட்ரங்கி ரே, மாறன் உள்ளிட்ட படங்கள் ஓடிடியில் வெளியாகி படு தோல்வியை சந்தித்ததும் ஒரு காரணமாக இருக்கலாம் என்றும் பேச்சுக்கள் அடிபட்டு வருகின்றன. 100 கோடிக்கும் மேல் பாக்ஸ் ஆபிஸ் வசூலை தனுஷ் படங்கள் எட்டினால் அவரும் தனது சம்பளத்தை அதிரடியாக உயர்த்துவார் என்றும் கூறுகின்றனர்.