Tamil Nadu News: தமிழகத்தில் சி.பி.சி.எல். நிறுவனத்தின் கச்சா எண்ணெய் சுத்திகரிப்பு ஆலையில் 75 சதவீத சுத்திகரிப்பு பணிகள் மட்டுமே நடைபெற வேண்டும் என மாசு கட்டுப்பாட்டு வாரியம் அதிரடி உத்தரவு பிறப்பித்துள்ளது. இதனால், எரிபொருள் தட்டுப்பாடு உருவாகும் அபாயம் உள்ளது என்று மக்கள் அஞ்சுகின்றனர்.
சென்னைக்கு அருகில் இருக்கும் மணலியில் சி.பி.சி.எல். நிறுவனம் கச்சா எண்ணெய்யை சுத்திகரித்து பெட்ரோல், டீசல், சமையலுக்கு தேவையான எரிவாயு ஆகிய பல்வேறு எரிபொருட்கள் பிரித்தெடுக்க உதவுகிறது.
இந்த ஆலையில் இருந்து வெளியேறும் கழிவு வாயுக்களால் சுற்று வட்டாரத்தில் இருக்கும் மக்கள் மிகவும் பாதிக்கப்படுகின்றனர்.
கடுமை கலவை மானிடர்களால் காற்றின் தரத்தை ஆய்வு செய்த மாசு கட்டுப்பாடு வாரியம், அங்கிருந்த அபாயத்தை அறிந்து அதிரடி உத்தரவு பிறப்பித்துள்ளது. அது என்னவென்றால், இனிமேல் சி.பி.சி.எல். பெட்ரோலிய சுத்திகரிப்பை 70 சதவீதமாக குறைக்க வேண்டும் என்பது தான்.
இதனால் மக்களின் அன்றாட வாழ்க்கையில் ஏற்படும் பாதிப்பு குறையும் என்றாலும், பெட்ரோலிய பொருட்களின் உற்பத்தி கணிசமாக குறைய கூடும் என்பது மக்களின் மத்தியில் அதிர்ச்சி தகவலாக சென்றடைகிறது.
தென் இந்தியாவின் பெரும்பாலான பகுதிகளுக்கு பெட்ரோலிய பொருட்களை உற்பத்தி செய்யும் முக்கிய மையமாக சி.பி.சி.எல். நிறுவனம் இருக்கிறது. சென்னை, நாகை ஆகிய இரண்டு இடங்களுக்கும் இந்த நிறுவனத்தின் மூலம் ஆண்டுக்கு 11.5 மில்லியன் டன் கச்சா எண்ணெய் சுத்திகரிக்கப்படுகிறது.
இதில் மணலியில் இருக்கும் நிலையம் மட்டும் ஆண்டுக்கு 10.5 மில்லியன் டன் கச்சா எண்ணெய் சுத்திகரிக்கும் திறன் கொண்டது. மாசு கட்டுப்பாடு வாரியத்தின் உத்தரவால் இனி ஆண்டிற்கு 7.87 மில்லியன் டன் மட்டுமே சுத்திகரிக்க முடியும் என்று கூறுகின்றனர்.
இந்த முடிவினால் 2.67 மில்லியன் டன் கச்சா எண்ணெய் நஷ்டம் ஏற்படும் என்று கூறுகின்றனர். இதனால், வாகன எரிபொருளாக பெட்ரோல், டீசல் மட்டுமல்லாமல் சமையல் எரிவாயு, மண்ணெண்ணெய், மெழுகு, மற்றும் இதர வேதிப்பொருட்கள் ஆகியவற்றின் உற்பத்தியும் பாதிப்படையும்.
நாள்தோறும் மூன்று லட்சத்திற்கும் மேல் இந்தியன் எரிவாயு சிலிண்டர்கள் அடைக்கப்பட்டு வழங்கப்படும் நிலையில் இந்த உத்தரவு மக்களை மீண்டும் சிலிண்டர்களுக்காக காத்திருக்கும் நெருக்கடிக்கு தள்ளப்போகிறது என்று மக்கள் வருந்துகின்றனர்.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil