செல்போனில் ஆபாச படம் காட்டி, சிறுவர்களுக்குப் பாலியல் தொல்லை! – போக்சோவில் லோடுமேன் கைது

ராமநாதபுரத்தைச் சேர்ந்த அண்ணன்-தம்பியான இரு சிறுவர்கள், அந்தப் பகுதியில் உள்ள பள்ளியில் படித்து வருகின்றனர். இந்த நிலையில், அண்மையில் அவர்கள் பள்ளியில் பாலியல் விழிப்புணர்வு தொடர்பான நிகழ்ச்சி நடந்திருக்கிறது. அதில் அவர்களுக்கு ‘குட் டச்’, ‘பேட் டச்’ என்றால் என்ன என்பது குறித்து விளக்கமாக விவரிக்கப்பட்டிருக்கிறது.

விழிப்புணர்வு நிகழ்ச்சி முடிந்து அண்ணன்-தம்பி இருவரும் தங்கள் வகுப்புக்குச் சென்றனர். அப்போது இருவரில் தம்பி தன்னுடைய வகுப்பு ஆசிரியரிடம், “லோடுமேன் அண்ணா ஒருவர் செல்போனில் ஆபாசப் படங்களை காட்டி என்னிடமும் என் அண்ணனிடமும் அந்த ஆபாச படங்களில் வருவது போல் செய்தார் . மேலும், எங்களையும் அதே போல செய்யச் சொல்லி வற்புறுத்தினார்” எனக் கூறியிருக்கிறான். அதைக் கேட்ட ஆசிரியர் அதிர்ச்சியடைந்தார்.

இதையடுத்து, சிறுவர்களை விசாரித்த ஆசிரியர்கள் உடனடியாக அவர்களின் பெற்றோருக்குத் தகவல் தெரிவித்தனர். மேலும், இது குறித்து ராமநாதபுரம் `சைல்ட் லைன்’ அதிகாரிகளிடமும் புகார் அளிக்கப்பட்டது. சிறுவர்களின் பெற்றோர் கேணிக்கரை காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். போலீஸார் விசாரணையில், சிறுவர்களுக்குப் பாலியல் தொல்லை கொடுத்தது, பட்டணம்காத்தான் பழைய வீட்டு வசதி வாரியக் குடியிருப்பு பகுதியைச் சேர்ந்த லோடுமேன் சாமிநாதன் என்பது தெரியவந்தது.

கேணிக்கரை காவல் நிலையம்

அதையடுத்து, போலீஸார் அவரை போக்சோ சட்டத்தின் கீழ் கைதுசெய்தனர். தொடர்ந்து அவரிடம் விசாரணை மேற்கொண்டுவருகின்றனர்.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.