சேலம் மாவட்டம் ஏற்காடு அருகே அருவியில் தவறி விழுந்தவர் உயிரிழந்துள்ளார்.
திருப்பூர் மாவட்டம் பூண்டி பெரியகாடு பகுதியை சேர்ந்தவர் இன்ஜினியர் சக்திவேல் (53). இவர் குடும்பத்தினருடன் ஏற்காட்டிற்கு சுற்றுலா சென்றுள்ளார்.
அங்கு முக்கிய இடங்களை சுற்றி பார்த்த சக்திவேல் குடும்பத்தினர், இன்று காலை ஏற்காடு அருகே உள்ள நல்லூர் நீர்வீழ்ச்சிக்கு சென்றுள்ளனர்.
அப்பொழுது சக்திவேல், அருவியின் மேற்பகுதியில் உள்ள பாறையில் ஏறும்பொழுது எதிர்பாராத விதமாக தவறி கீழே விழுந்துள்ளார். இதில் பலத்த காயமடைந்த சக்திவேல் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்துள்ளார்.
இதையடுத்து இந்த சம்பவம் குறித்து தகவல் அறிந்து வந்த போலீசார் உயிரிழந்த சக்திவேலின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இது குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்