முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று மாலை டெல்லி செல்கிறார்.
குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு, துணை குடியரசுத் தலைவர் ஜெகதீப் தன்கர் ஆகியோரை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நாளை சந்திக்கிறார். இருவரும் பதவியேற்ற பின்னர் முதன்முறையாக டெல்லி செல்லும் முதலமைச்சர், மரியாதை நிமித்தமாக அவர்களை சந்தித்து வாழ்த்து தெரிவிக்க உள்ளார்.
பிரதமர் நரேந்திர மோடியை சந்தித்து நிலுவையில் உள்ள தமிழக அரசின் கோரிக்கைகள் குறித்து மு.க.ஸ்டாலின் மனு அளிப்பார் எனத் தகவல்கள் தெரிவிக்கின்றன. மேலும் செஸ் ஒலிம்பியாட் போட்டியின் தொடக்க விழாவில் பிரதமர் மோடி கலந்துகொண்டதற்கு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் நேரில் நன்றி தெரிவிக்க உள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM
