திருப்பதியில் ரூல்ஸ் பிரேக்… உள்ள புகுந்த பெரும்புள்ளிகள்- டென்ஷனில் பக்தர்கள்!

ஆந்திர மாநிலம் திருப்பதி திருமலையில் கடந்த மூன்று நாட்களாக தொடர் விடுமுறை காரணமாக பக்தர்கள் கூட்டம் அலைமோதியது. நீண்ட வரிசையில் பல மணி நேரம் காத்திருந்து தரிசிக்க வேண்டிய நிலை ஏற்பட்டது. இதையொட்டி விஐபிக்கள் மட்டும் தரிசனம் செய்யும் சிறப்பு நடைமுறையை வரும் 21ஆம் தேதி வரை ரத்து செய்து திருமலை திருப்பதி தேவஸ்தானம் நடவடிக்கை எடுத்திருந்தது. எனவே விஐபி பரிந்துரை கடிதங்கள் கொண்டு வந்தால் அவை ஏற்கப்படாது என்று தெரிவிக்கப்பட்டது.

ஆனால் ஆந்திராவில் ஆளுங்கட்சியாக இருக்கும் ஒய்.எஸ்.ஆர் காங்கிரஸ் கட்சியை சேர்ந்தவர்கள் செய்த செயல் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அதாவது, துணை முதல்வர் நாராயண சுவாமி கடந்த 14 மற்றும் 15 ஆகிய தேதிகளில் விஐபி தரிசனம் செய்துள்ளார். இதையடுத்து மாநில மகளிர் மற்றும் குழந்தைகள் நலத்துறை அமைச்சர் உஷாஸ்ரீ சரண் மற்றும் அவரது 50 ஆதரவாளர்கள் விஐபி தரிசனம் செய்திருக்கின்றனர்.

7 கிலோமீட்டர் க்யூ… 2 நாட்கள் வெயிட்டிங்… திருப்பதி தரிசனம் ரொம்ப கஷ்டம்!

அதுவும் தேவஸ்தான அதிகாரிகளை வற்புறுத்தி விஐபி பிரேக் தரிசன டிக்கெட்கள் மற்றும் சுப்ரபாத தரிசன டிக்கெட்களை பெற்றுக் கொண்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இதுதொடர்பான புகைப்படங்கள் மற்றும் வீடியோக்கள் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளன. ஏனெனில் சாதாரண பக்தர்கள் 30 முதல் 40 மணி நேரம் வரை சாமி தரிசனம் செய்ய காத்திருக்க வேண்டியுள்ளது.

தொடர் விடுமுறை எதிரொலியால் கடந்த 14ஆம் தேதி அன்று ஒரேநாளில் 92 ஆயிரத்து 328 பக்தர்கள் ஏழுமலையானை தரிசனம் செய்துள்ளனர். அதன்பிறகும் கூட்டம் நெரிசல் அதிகமாகவே இருந்துள்ளது. இதனால் பக்தர்கள் தங்களது தரிசன திட்டத்தை ஒத்திவைக்குமாறு தேவஸ்தானம் கேட்டுக் கொண்டது.

இப்படியொரு கோரிக்கையை தேவஸ்தானம் முன்வைப்பது வரலாற்றில் முதல்முறை என்பது கூறப்படுகிறது. இத்தகைய சூழலில் ஆளும் ஒய்.எஸ்.ஆர் காங்கிரஸ் கட்சி பிரமுகர்கள் விஐபி தரிசன முறையில் ஏழுமலையானை தரிசித்தது பெரும் சர்ச்சையாகி உள்ளது. இந்த விஷயத்தை எதிர்க்கட்சிகள் கையில் எடுத்துள்ளன.

KIA Terminal 2: ரெண்டே மாசம் தான்… மெகா சர்ப்ரைஸ்க்கு ரெடியாகும் பெங்களூரு!

திருமலையில் உள்ள வைகுண்ட காம்ப்ளக்ஸில் அனைத்து அறைகளும் நிரம்பி வழிகின்றன. ஆஸ்தான மண்டபத்தை தாண்டி வரிசை நீண்டு கொண்டே செல்கிறது. பக்தர்கள் இரவு, பகல் பாராமல் தொடர்ந்து காத்திருக்கின்றனர். அதுவும் விஐபி பிரேக் தரிசனம் ரத்து செய்யப்பட்ட நிலையில் ஆளுங்கட்சியினருக்கு விஐபி டிக்கெட்களை எப்படி வழங்கலாம்? இதுதான் எளிய பக்தர்களுக்கு நீங்கள் அளிக்கும் மரியாதையா? என்று கேள்வி எழுப்பியுள்ளனர்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.