நாட்டின் மொத்த விலை பணவீக்க விகிதம் சற்றே குறைந்துள்ளது. மத்திய புள்ளியியல் அமைச்சகம் வெளியிட்ட தகவல்படி ஜூலை மாதத்திற்கான மொத்த விலை பணவீக்கம் 13.93% ஆக குறைந்துள்ளது. முந்தைய மாதமான ஜூன் மாதத்தில் மொத்த விலை பணவீக்கம் 15.18 சதவீதமாக இருந்தது. ஜூன் மாதத்தை விட 1.25 சதவீதம் குறைந்த போதிலும் மொத்த விலை பணவீக்கம் 2021 ஆம் ஆண்டு ஏப்ரல் முதல் தொடர்ச்சியாக 16வது மாதமாக இரட்டை இலக்க அளவிலேயே உள்ளது குறிப்பிடத்தக்கது.
ஜூலை மாதத்திற்கான சில்லறை விலை பணவீக்கம் 6.71% ஆக குறைந்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. விலைவாசி உயர்வை கட்டுப்படுத்தும் நடவடிக்கைகளில் ஒரு பகுதியாக வங்கி வட்டி விகிதங்களை ரிசர்வ் வங்கி அண்மைக்காலமாக உயர்த்தி வருகிறது.
Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM
