அதிமுக சார்பில் ஓ. பன்னீர்செல்வத்தை துணை எதிர்க்கட்சித் தலைவர் என்ற பதவியில் இருந்து நீக்க வேண்டும் என்று கொடுத்த மனுவை துணை சபாநாயகர் சட்டப்படி ஏற்றுக்கொள்ள வேண்டும் என்று அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் பேட்டி அளித்துள்ளார். சபாநாயகர் கட்டப்பஞ்சாயத்து ராஜாவாக செயல்பட கூடாது’ என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.
அண்ணா தொழிற்சங்க உண்ணாவிரதப்போராட்டத்தில் பங்கேற்ற முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் செய்தியாளர்களை சந்தித்தார்.
அப்போது பேசிய அவர், ‘போக்குவரத்து ஊழியர்கள் கோரிக்கையை நிறைவேற்றுவோம் என திமுக கொடுத்த தேர்தல் வாக்குறுதிகளை ஏன் நிறைவேற்றவில்லை? இந்த அரசிடம் கூறுவது செவிடன் காதில் சங்கு ஊதுவது போல உள்ளது. நாங்கள் மக்களுக்கு இடையூறு செய்யும் வகையில் வேலைநிறுத்தம் செய்ய விரும்பவில்லை. ஆனால் அந்த நிலைக்கு தள்ள வேண்டாம்’ என கூறினார்.
Apple Link: https://apple.co/3yEataJ