தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டியில், இரண்டு பைக்குகள் நேருக்கு நேர் மோதியதில் சரிந்து விழுந்த மாணவன் மீது பின்னால் வந்த பள்ளி வாகனம் ஏறி இறங்கியதில் பரிதாபமாக உயிரிழந்தான்.
மேலக்காலனியைச் சேர்ந்த ஸ்ரீபுஷ்பராஜ், கே.ஆர்.ஏ. பள்ளியில் 11ஆம் வகுப்பு படித்து வந்த நிலையில், நேற்று உறவினரின் பைக்கில் கோவில்பட்டி கூடுதல் பேருந்து நிலையம் வழியாக சென்றுள்ளர்.
அப்போது எதிரே வந்த மற்றொரு பைக் எதிர்பாராதவிதாமாக ஸ்ரீபுஷ்பராஜ் பைக் மீது நேருக்கு நேர் மோதியது.
மோதிய வேகத்தில் நிலைத்தடுமாறி கீழே விழுந்த ஸ்ரீபுஷ்பராஜ் மீது பின்னால் பள்ளி வாகனத்தின் பின் பக்க சக்கரம் ஏறி இறங்கியது.
இதில் மாணவன் உயிரிழந்த நிலையில், ஸ்ரீபுஷ்பராஜ் படித்து வரும் பள்ளியின் வாகனம் சுதந்திர தினவிழாவில் பங்கேற்ற மாணவர்களை ஏற்றிக்கொண்டு சென்ற போது விபத்து ஏற்பட்டது தெரியவந்தது.