சென்னை
:
நடிகை
நயன்தாரா
மற்றும்
இயக்குநர்
விக்னேஷ்
சிவன்
திருமணம்
சமீபத்தில்
நடந்து
முடிந்துள்ளது.
இந்த
ஜோடி
தாய்லாந்திற்கு
ஹனிமூன்
சென்று
வந்தது.
தொடர்ந்து
தங்களுடைய
கேரியரில்
இவருவரும்
சிறப்பான
கவனத்தை
செலுத்தி
வருகின்றனர்.
இந்நிலையில்
தற்போது
இரண்டாவது
ஹனிமூனிற்காக
இருவரும்
பார்சிலோனாவிற்கு
சென்றுள்ளனர்.
விக்கி
-நயன்
ஜோடி
இயக்குநர்
விக்னேஷ்
சிவன்
மற்றும்
நடிகை
நயன்தாரா
இருவரும்
நானும்
ரவுடிதான்
படத்தில்
இணைந்தபோதே
காதல்
வசப்பட்டனர்.
இவர்கள்
இருவரும்
எப்போது
திருமணம்
செய்துக்
கொள்வார்கள்
என்று
தமிழ்
ரசிகர்கள்
மிகுந்த
ஆர்வம்
காட்டினர்.
தொடர்ந்து
இருவரும்
இந்தக்
கேள்வியை
அதிகமாக
எதிர்கொண்டனர்.

தாய்லாந்தில்
ஹனிமூன்
இந்நிலையில்
சமீபத்தில்
இவர்களது
திருமணம்
நடந்து
முடிந்துள்ளது.
இருவரும்
ஏராளமான
திரையுலக
பிரபலங்கள்
சூழ
தங்களது
திருமணத்தை
முடித்துள்ளனர்.
நடிகர்
ரஜினிகாந்த்,
தாலி
எடுத்துக்
கொடுக்க
இந்த
திருமணம்
இனிதே
நடந்து
முடிந்தது.
தொடர்ந்து
இவர்கள்
ஹனிமூனுக்கு
போக
மாட்டார்கள்
என்று
கூறப்பட்ட
நிலையில்,
தாய்லாந்திற்கு
பயணமானது
இந்த
ஜோடி.

புகைப்படங்கள்
பகிர்வு
அங்கு
இவர்களின்
ரொமான்ஸ்
வீடியோக்கள்,
புகைப்படங்கள்
அதிகமாக
எடுக்கப்பட்டு
சமூக
வலைதளங்களில்
ஷேர்
செய்யப்பட்டது.
இந்த
பணியை
சிறப்பாகவே
செய்தார்
இயக்குநர்
விக்னேஷ்
சிவன்.
இந்தப்
புகைப்படங்களுக்கு
லைக்ஸ்களும்
கமெண்ட்களும்
பிய்த்துக்
கொண்டு
போனது.

கேரியரில்
கவனம்
இந்நிலையில்
நாடு
திரும்பிய
இருவரும்
தங்களது
பணிகளில்
தங்களை
ஈடுபடுத்திக்
கொண்டனர்.
நயன்தாரா
ஷாருக்குடன்
ஜவான்
மற்றும்
ஜெயம்
ரவியுடன்
இறைவன்
ஆகிய
படங்களின்
சூட்டிங்கில்
இணைந்த
நிலையில்,
சர்வதேச
செஸ்
ஒலிம்பியாட்
போட்டிகளின்
துவக்க
விழா
கொண்டாட்டத்தை
சிறப்பாக
அரங்கேற்றினார்
விக்னேஷ்
சிவன்.
அவருக்கு
பாராட்டுக்கள்
குவிந்தன.

2வது
ஹனிமூன்
இந்நிலையில்
தற்போது
கிடைத்த
சிறிய
இடைவெளியில்
தங்களது
இரண்டாவது
ஹனிமூனுக்கு
பார்சிலோனாவிற்கு
சென்றுவிட்டனர்
நயனும்
விக்கியும்.
அங்கிருந்து
இவர்கள்
பதிவிடும்
ரொமாண்டிக்
புகைப்படங்களும்
ரசிகர்களை
வெகுவாக
கவர்ந்து
வருகிறது.
தன்னுடைய
மனைவியை
வித்தியாசமான
கோணங்களில்
படம்பிடித்து
வெளியிட்டு
வருகிறார்
விக்னேஷ்.

ரொமான்டிக்
புகைப்படம்
இதனிடையே
நேற்றைய
தினம்
சுதந்திர
தினத்தையொட்டி
இருவரும்
தேசியக்
கொடியை
பெருமையுடன்
பறக்கவிட்டனர்.
தொடர்ந்து
பழமை
வாய்ந்த
சாக்ரடா
பெமிலியா
கோவிலில்
இருவரும்
புகைப்படம்
எடுத்துள்ளனர்.
இதில்
நயன்தாராவின்
நெற்றியில்
முத்தமிட்டபடி
போஸ்
கொடுத்துள்ளார்
விக்னேஷ்
சிவன்.

நயன்
-விக்கியின்
அலப்பறை
இவர்கள்
இருவரும்
இந்தியாவில்
இருந்தாலும்
வெளிநாட்டிற்கு
சென்றாலும்
தங்களது
அன்பை
வெளிப்படுத்தும்
புகைப்படங்களை
தொடர்ந்து
பதிவிட்டு
வருகின்றனர்.
இந்தப்
புகைப்படங்கள்
ஏராளமான
லைக்ஸ்களை
பெற்று
வருகின்றன.
ஆனாலும்
தொடர்ந்து
ரொமாண்டிக்காக
புகைப்படங்களை
பதிவிட்டு
அனைவரையும்
வெறுப்பேற்றி
வருகிறார்
விக்னேஷ்
சிவன்.
இவர்கள்
அலப்பறைக்கு
அளவே
இல்லையா
என்று
ரசிகர்களை
கேட்கவும்
வைக்கிறார்.