தெலுங்கு நடிகரான நாக சைதன்யா, அண்மையில் ஆமீர் கானின் ‘லால் சிங் சத்தா’ படத்தில் முக்கியக் கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். ஹாலிவுட்டில் வெளியான ‘Forrest Gump’ படத்தைத் தழுவி எடுக்கப்பட்ட இப்படம் பல்வேறு சர்ச்சைகளுக்கு மத்தியில் திரையரங்குகளில் ஓடிக்கொண்டிருக்கிறது. இதையொட்டி நேர்காணல் ஒன்றில் பேசிய நடிகர் நாக சைதன்யா, பாலிவுட் நடிகைகளான கத்ரீனா கைஃப், ஆலியா பட் இருவர் பற்றியும், தான் சேர்ந்து பணியாற்ற விரும்பும் நடிகைகள் பற்றியும் கூறியுள்ளார்.

இதுபற்றி நாக சைதன்யா, “நான் சேர்ந்து பணியாற்ற விரும்பும் நடிகைகளின் பட்டியல் நீளமானது. அதில் குறிப்பாக ஆலியா பட். அவருடைய நடிப்பு எனக்கு மிகவும் பிடிக்கும். அதன்பின் கத்ரீனா கைஃப். அவர் மிகவும் அழகானவர். இதுபோல் பிரியங்கா சோப்ரா, கரீனா கபூர் என நிறைய பேர் இருக்கிறார்கள். உண்மையில் எனது இந்தப் பட்டியல் மிகவும் நீளமானது. இருப்பினும் என்னுடைய முதல் க்ரஷ் சுஸ்மிதா சென்தான்” என்று கூறினார்.