சென்னை
:
பிரபல
தமிழ்
சினிமா
விமர்சகர்
மற்றும்
தொகுப்பாளர்
கௌசிக்
மாரடைப்பால்
உயிரிழந்துள்ளார்.
தனியார்
ஊடகங்களில்
வேலை
செய்துவந்த
கௌசிக்
சினிமா
விமர்சகராகவும்
டிராக்கராகவும்
சிறப்பாக
செயல்பட்டு
வந்தார்.
இந்நிலையில்
கௌசிக்
மறைவிற்கு
பிரபலங்கள்
பலரும்
தங்களது
இரங்கலை
தெரிவித்து
வருகின்றனர்.
சினிமா
விமர்சகர்
கௌசிக்
பிரபல
தமிழ்
சினிமா
விமர்சகர்
மற்றும்
தொகுப்பாளர்
கௌசிக்.
தனியார்
ஊடகங்களில்
வேலை
செய்து
வந்த
இவர்
சினிமா
விமர்சனம்
மற்றும்
டிராக்கராக
அறியப்பட்டார்.
ட்விட்டர்
போன்ற
தளங்களில்
இவர்
தொடர்ந்து
சிறப்பான
சினிமா
தொடர்பான
தகவல்களை
வெளியிட்டு
ரசிகர்களை
கவர்ந்து
வந்தார்.

மாரடைப்பால்
மரணம்
தொடர்ந்து
சினிமா
செய்திகளை
உடனுக்குடன்
விறுவிறுப்பாக
கொடுத்துவந்த
கௌசிக்கை
ஏராளமான
சினிமா
ரசிகர்கள்
பாலோ
செய்து
வந்தனர்.
இந்நிலையில்
நேற்றைய
தினம்
அவர்
மாரடைப்பால்
உறக்கத்திலேயே
உயிரிழந்தார்.
அவரது
மரணம்
ஊடகம்
மற்றும்
சினிமா
துரையினரிடையே
அதிர்ச்சியை
ஏற்படுத்தியுள்ளது.

சினிமா
பிரபலங்கள்
இரங்கல்
ராகவா
லாரன்ஸ்,
துல்கர்
சல்மான்,
கீர்த்தி
சுரேஷ்
அதிதி
ராவ்
ஹைதாரி,
வெங்கட்
பிரபு
உள்ளிட்ட
திரையுலக
பிரபலங்கள்
கௌசிக்கின்
மரணத்திற்கு
சமூக
வலைதளங்கள்
மூலம்
அஞ்சலி
செலுத்தி
வருகின்றனர்.
நேரிலும்
ஏராளமான
ரசிகர்கள்
மற்றும்
திரையுலக
பிரபலங்கள்
அஞ்சலி
செலுத்தி
வருகின்றனர்.

சினிமா
மீது
அதிக
ஆர்வம்
பொறியியல்
படித்திருந்தாலும்
கௌசிக்கிற்கு
சினிமா
மீதுதான்
அதிகமான
ஆர்வம்
காணப்பட்டது.
இதையடுத்து
இவர்
சினிமா
தொடர்பான
எம்பிஏவையும்
முடித்துள்ளார்.
பிரபல
ஊடகங்களில்
இவர்
பணியாற்றியுள்ளார்.
நேற்றைய
தினம்
இவர்
பத்திரிகையாளர்
சந்திப்பு
ஒன்றில்
கலந்துக்
கொள்ள
திட்டமிட்டிருந்ததாக
கூறப்படுகிறது.

உறக்கத்திலேயே
மரணம்
இதையடுத்து
அவரை
ஊடக
நண்பர்கள்
தொடர்ந்து
தொடர்பு
கொள்ள
முயன்றதாகவும்
ஆனால்
எந்தவிதமான
ரெஸ்பான்சும்
இல்லை
என்று
கூறப்படுகிறது.
இதையடுத்து
உறக்கத்திலேயே
கௌசிக்
உயிரிழந்ததாக
கூறப்பட்டுள்ளது.
சினிமா
தொடர்பான
பல
விஷயங்களை
சுவைப்பட
ரசிகர்களுக்கு
கொடுத்துவந்த
கௌசிக்கின்
மரணம்
அனைத்து
தரப்பினரையும்
அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளது.

பரபரப்பான
வாழ்க்கைகான
விலை
கௌசிக்
35
வயதிலேயே
உயிரிழந்துள்ளார்.
தற்காலங்களில்
இளம்
வயது
மரணங்கள்
அதிகரித்து
வருகின்றன.
பரபரப்பான
வாழ்க்கைக்கு
நாம்
கொடுத்துவரும்
இத்தகைய
விலை,
மிகவும்
கொடுமையானது.
மேலும்
உணவுப்பழக்கமும்
இதில்
சேர்ந்துக்
கொள்கிறது.
அந்த
நேரத்திற்கான
பசியை
போக்க
பீட்சா
உள்ளிட்ட
மைதா
பொருட்களை
நாம்
நாடுகிறோம்.
கண்டிப்பாக
ஹெல்தியான
வாழ்க்கை
முறைக்கு
மாற
வேண்டிய
அவசியத்தை
நாம்
உணர
வேண்டிய
தருணம்
இது.