பிரேக் செயலிழந்ததால் ஆற்றில் விழுந்த பஸ்… ஏழு ITBP வீரர்கள் பலி; பலர் காயம்

ஸ்ரீநகர்: ஜம்மு காஷ்மீர் மாநிலம் பஹல்காமில் உள்ள சந்தன்வாரி அருகே, இந்தோ-திபெத்திய எல்லைக் காவல் படையினர் சென்ற வாகனம் இன்று விபத்துக்குள்ளானதில் 7 ராணுவ வீரர்கள் உயிரிழந்தனர். ஃபிரிஸ்லான் என்ற இடத்தில் அவர்களின் வாகனம் சாலையில் கவிழ்ந்து ஆற்றங்கரையில் விழுந்ததில் சுமார் 30 வீரர்கள் காயமடைந்துள்ளனர். அமர்நாத் யாத்திரை பாதுகாப்பு பணிக்காக அனுப்பப்பட்ட ITBP ராணுவ வீரர்கள் பணியில் இருந்து திரும்பிக் கொண்டிருக்கும் போது, இந்த சம்பவம் நடந்துள்ளது. 37 ஐடிபிபி (ITBP) பணியாளர்கள் மற்றும் இரண்டு போலீஸ்காரர்களுடன் சென்ற பேருந்து சந்தன்வாடி மற்றும் பஹல்காம் இடையே உள்ள ஆழமான பள்ளத்தாக்கில் விழுந்ததாக காவல்துறை அதிகாரி ஒருவர் தெரிவித்தார். இந்த சம்பவத்தை அறிந்த காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி இந்த சம்பவத்தில் உயிரிழந்தவர்களுக்கு இரங்கல் தெரிவித்துள்ளார். மேலும் காயமடைந்தவர்கள் விரைவில் குணமடைய வேண்டும் என வாழ்த்தினார். 

ராகுல் காந்தி தனது ட்வீட்டில்,”ஜே & கே பஹல்காம் பகுதியில் 39 ஐடிபிபி பணியாளர்களை ஏற்றிச் சென்ற பேருந்து பள்ளத்தாக்கில் விழுந்ததைக் கேள்விப்பட்டதில் மிகவும் வருத்தமாக இருக்கிறது. காயமடைந்த வீரர்கள் விரைவில் குணமடையவும், வீரமரணம் அடைந்த வீரர்களின் ஆன்மா சாந்தியடையவும் பிரார்த்திப்பதோடு, அவர்களை இழந்து வாடும் குடும்பத்தினருக்கு எனது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறேன்” எனப் பதிவிட்டுள்ளார்.

जम्मू-कश्मीर के पहलगाम इलाके में आईटीबीपी के 39 जवानों से भरी बस के खाई में गिरने की ख़बर बेहद दुःखद है।

मैं घायल जवानों के जल्द स्वस्थ होने और शहीद जवानों की आत्मा की शांति की कामना करता हूं एवं शोक-संतप्त परिवारों के प्रति अपनी गहरी संवेदनाएं प्रकट करता हूं।

— Rahul Gandhi (@RahulGandhi) August 16, 2022

“ஜம்மு காஷ்மீர் அனந்த்நாக்கில் நடந்த துரதிர்ஷ்டவசமான விபத்தில் ITBP பணியாளர்களின் விலைமதிப்பற்ற உயிர்களின் துயரமான இழப்பு என்னை சோகத்தில் ஆழ்த்தியுள்ளது. உயிரிழந்த குடும்பங்களுக்கு எனது இதயப்பூர்வமான இரங்கலைத் தெரிவித்துக்கொள்கிறேன். காயமடைந்தவர்கள் விரைவில் குணமடைய நான் பிரார்த்திக்கிறேன்” என்று ஜனாதிபதி திரௌபதி முர்மு தெரிவித்துள்ளார்.

இந்த சம்பவம் நடந்த உடனே ITBP PRO தரப்பில் இருந்து, “எங்கள் ஆறு ஜவான்கள் உயிரிழந்துள்ளனர், 30 பேர் காயமடைந்துள்ளனர். காயமடைந்தவர்களுக்கு சிறந்த சிகிச்சை அளிப்போம். ஐடிபிபி தலைமையகம் நிலைமையை கண்காணித்து வருகிறது. ஜவான்கள் அமர்நாத் யாத்திரை பணியில் இருந்து திரும்பிக் கொண்டிருந்தனர். பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு அனைத்து உதவிகளும் வழங்கப்படும்” என அறிவிக்கப்பட்டது.

#WATCH Bus carrying 37 ITBP personnel and two J&K Police personnel falls into riverbed in Pahalgam after its brakes reportedly failed, casualties feared#JammuAndKashmir pic.twitter.com/r66lQztfKu

— ANI (@ANI) August 16, 2022

அதன்பிறகு இறப்பு எண்ணிக்கை இப்போது 7 ஆக உயர்ந்துள்ளது என்பதை உறுதிப்படுத்தப்பட்டு உள்ளது. “பலத்த காயங்களுடன் 8 ஜவான்கள் மருத்துவ சிகிச்சைக்காக விமானம் மூலம் ஸ்ரீநகருக்கு அனுப்பப்பட்டுள்ளனர். மற்றவர்கள் அனந்த்நாக்கில் உள்ள மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்  என்று காஷ்மீர் மண்டல ITBP DG எஸ்.எல் தாஸன் கூறினார். 

#WATCH Injured ITBP personnel rushed to a hospital in Anantnag, J&K

6 ITBP personnel have lost their lives, several injured after a bus carrying 37 ITBP personnel and 2 Police personnel fell into riverbed in Pahalgam pic.twitter.com/7QjiswkUnt

— ANI (@ANI) August 16, 2022

உயிரிழந்தவர்களை மீட்க எல்லைப் பாதுகாப்புப் படையின் ஹெலிகாப்டர் தீவிரப்படுத்தப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர். ANI செய்தி நிறுவனத்தால் பகிரப்பட்ட காட்சிகள் காயமடைந்த அதிகாரிகள் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்படுவதைக் காட்டுகின்றன.

 

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.