பெற்றோர் இறந்தால் திருமணமான பெண்களுக்கு இன்சூரன்ஸ் பணம் கிடைக்குமா?

விபத்துகளில் ஒருவர் இறந்தால் அவருடைய இன்சூரன்ஸ் பணம் மகன்களுக்கு மட்டுமே உண்டு என்றும் திருமணமான மகளுக்கு இல்லை என்றும் இன்சூரன்ஸ் நிறுவனம் வாதம் செய்ததை நீதிமன்றம் ஏற்றுக்கொள்ளவில்லை.

திருமணமான மகள்களுக்கும் பெற்றோர்கள் விபத்தில் இறந்தால் இன்சூரன்ஸ் பணம் கிடைக்க வேண்டுமென நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு கொடுத்துள்ளது.

இந்த வழக்கின் தீர்ப்பு பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ள நிலையில் இந்த வழக்கு குறித்து சற்று விரிவாக பார்ப்போம்.

குரங்கு அம்மை நோய்க்கு காப்பீடு உண்டா? என்ன சொல்கிறது இன்சூரன்ஸ் விதிகள்?

திருமணமான மகள்கள்

திருமணமான மகள்கள்

கடந்த 2012ஆம் ஆண்டு ஏப்ரல் 12ஆம் தேதி கர்நாடக மாநிலத்தில் உள்ள யமலூர் அருகே விபத்தில் ரேணுகா என்பவர் உயிரிழந்தார். இதனை அடுத்து அவருடைய திருமண மகள்களுக்கும் இழப்பீடு வழங்க வேண்டும் என இன்சூரன்ஸ் நிறுவனத்திற்கு கோரிக்கை விடப்பட்டது. இன்சூரன்ஸ் நிறுவனம் இதனை ஏற்றுக்கொள்ளவில்லை என்பதால் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது.

காப்பீடு

காப்பீடு

இந்த நிலையில் இதனை எதிர்த்து காப்பீட்டு நிறுவனம் தாக்கல் செய்த மேல்முறையீட்டு மனுவை உயர்நீதிமன்ற தனி நீதிபதி அமர்வு விசாரித்தது. ரேணுகாவின் கணவர், மூன்று மகள்கள் மற்றும் ஒரு மகன் இழப்பீடு கோரி இருந்த நிலையில் மோட்டார் விபத்து உரிமைகோரல் தீர்ப்பாயம் குடும்ப உறுப்பினர்களுக்கு 6 சதவீத வட்டியுடன் 5 லட்சத்து 90 ஆயிரத்து 60 ரூபாயை இழப்பீடாக வழங்கியதாக செய்தி வெளியாகி உள்ளது.

இன்சூரன்ஸ்
 

இன்சூரன்ஸ்

இந்த நிலையில் இன்சூரன்ஸ் நிறுவனம் உயர்நீதிமன்றத்தில் திருமணமான மகள்கள் இழப்பீடு கோர முடியாது என்றும் அவர்கள் குடும்பத்தை சார்ந்தவர் அல்ல என்றும் வாதிட்டது. ஆனால் இந்த வாதத்தை உயர்நீதிமன்ற நீதிபதி ஏற்றுக் கொள்ளவில்லை.

சார்பு

சார்பு

சார்பு என்பது நிதி சார்ந்து இருப்பதை மட்டும் குறிக்காது என்றும் இழப்பை சார்ந்தது என்றும், தாயின் இழப்பு என்பது மகன், மகள் இருவருக்கும் ஒன்று என்பதால் மகள்கள் இழப்பீடு கோர உரிமை உண்டு என்றும் நீதிபதி தெரிவித்துள்ளார்.

உரிமை

உரிமை

மேலும் சார்பு என்பது பணத்தின் அடிப்படையில் மட்டும் சமப்படுத்த முடியாது என்றும் உரிமையின் அடிப்படையில் சமப்படுத்த வேண்டும் என்றும் நீதிமன்றம் தெரிவித்துள்ளது.

 நிராகரிப்பு

நிராகரிப்பு

இதனை அடுத்து மறைந்த பெண்ணின் வயது மற்றும் அவரது வருமானம் குறித்த சந்தேகங்கள் ஆகியவற்றை காப்பீட்டு நிறுவனம் வாதம் செய்த நிலையில் அந்த வாதத்தை நீதிமன்றம் நிராகரித்தது.

 மகள்களுக்கும் இழப்பீடு

மகள்களுக்கும் இழப்பீடு

இந்தநிலையில் தீர்ப்பாயத்தின் தீர்ப்பின்படி திருமணமான மகளுக்கும் இழப்பீடு வழங்க வேண்டும் என உத்தரவிடப்பட்டுள்ளது. இதனை அடுத்து பெற்றோர் விபத்தில் இறந்தால் திருமணமான மகள்களுக்கும் இன்சூரன்ஸ் தொகையை பெறுவதற்கு உரிமை உண்டு என்பது இந்த வழக்கின் மூலம் தெரியவந்துள்ளது.

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க
English summary

Married Women Are Also Entitled To Insurance Compensation After Parents’ Death, Says Court

Married Women Are Also Entitled To Insurance Compensation After Parents’ Death, Says Court |பெற்றோர் இறந்தால் திருமணமான பெண்களுக்கு இன்சூரன்ஸ் பணம் கிடைக்குமா?

Story first published: Tuesday, August 16, 2022, 7:20 [IST]

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.